3rd December 2021

ஓய்வூதியத் திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

செம்பனார்கோவில் வட்டார விவசாயிகள் ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்து பயனடையும்படி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தாமஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து, அவர் குறியாதவது :
செம்பனார்கோவில் வட்டாரத்துக்குள்பட்ட திருக்கடையூர், ஆக்கூர், செம்பனார்கோவில், திருவிடைக்கழி, சங்கரன்பந்தல், மாமாகுடி, காட்டுச்சேரி, தில்லையாடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 18 வயது முதல் 40 வயதுடைய அனைத்து சிறு, குறு விவசாயிகள் பிரதம மந்திரியின் சிறப்புத் திட்டமான மந்தன்யோஜனா திட்டத்தின் கீழ் பயனடையலாம். 60 வயது பூர்த்தியானவுடன் அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.3000 ஓய்வூதியம் வழங்கப்படும். இத்திட்டத்தில் 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்களுக்கு அரசு தனித்தனியாக நிர்யணத்துள்ள பிரிமீயத் தொகையில் தங்கள் வயதுக்குரிய பிரிமீயத் தொகையை மாதந்தோறும் செலுத்த வேண்டும். இத்திட்டத்தில் அரசு ஊழியர்கள் கலந்து கொள்ள முடியாது.

இத்திட்டத்தில் சேர விரும்பும் விவசாயிகள் தங்கள் ஆதார் கார்டு, வங்கிக் கணக்குப் புத்தங்கம் நகல் மற்றும் வாரிசுதாரர் சான்றதல் பிறந்த தேதியுடன் கூடிய நகல் போன்ற ஆவணங்களுடன் வட்டார அலுவலகத்துக்கு வந்து, விண்ணப்பிக்கலாம் என்றார் அவர்.

Leave a Reply

You cannot copy content of this page