மயிலாடுதுறை நகரில் பாதாள சாக்கடை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு -அமைச்சர்!!

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில்தமிழக அரசு சார்பில் மக்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் லலிதா தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் நிவேதாமுருகன், ராஜகுமார், பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி கலெக்டர் பாலாஜி வரவேற்று பேசினார். சுற்றுச்சூழல், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு மயிலாடுதுறை, குத்தாலம் பகுதிகளை சேர்ந்த 324 பயனாளிகளுக்கு இலவச மனைப்பட்டா, குடும்ப அட்டை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது.

மயிலாடுதுறை நகரில் முக்கிய பிரச்சினையாக உள்ள பாதாள சாக்கடை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கழிவு நீரை சுத்திகரித்து விவசாயத்திற்கு பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சம்பா, தாளடி அறுவடை பணிகள் நடந்து வருகிறது.

விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வதற்காக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. மயிலாடுதுறை மாவட்டத்தில் தேவைக்கு ஏற்ப அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களும் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், ஒன்றியக்குழு தலைவி காமாட்சிமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தாசில்தார் ராகவன் நன்றி கூறினார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் லலிதா தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், ராஜகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி கலெக்டர் நாராயணன் வரவேற்று பேசினார். விழாவில் அமைச்சர் மெய்யநாதன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு வீட்டுமனைப்பட்டா, திருமண உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, வேளாண் இடுபொருட்கள், மரக்கன்றுகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் ஒன்றியக்குழு தலைவர்கள் கமல ஜோதி தேவேந்திரன், ஜெயபிரகாஷ், ஒன்றிய செயலாளர்கள் சசிகுமார், பிரபாகரன், நகர செயலாளர் சுப்பராயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் செய்தி மக்கள் தொடர்பு உதவி அலுவலர் அஸ்வின் குமார் நன்றி கூறினார்.

More News

மயிலாடுதுறையில் வண்ணான் குளத்தை சுற்றி நடைபயிற்சி மேடை, பூங்கா அமைக்கும் பணி!

admin See author's posts

`கூடிய விரைவில் தமிழ்நாட்டை கருணாநிதி நாடு என பெயர் மாற்றுவார்கள்’- ஜெயக்குமார் காட்டம்

admin See author's posts

ஜெர்மனி சென்றடைந்தார் பிரதமர் மோடி: சிவப்பு கம்பள வரவேற்பு!

admin See author's posts

பிரசாந்த் கிஷோர் அரசியல் கட்சி தொடங்க திட்டம்?.. மக்களிடம் நேரடியாக செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என ட்வீட்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஏ.ஐ.டி.யூ.சி.- விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மே தின ஊர்வலம்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் மே தின கிராம சபை கூட்டம் நடந்தது!

admin See author's posts

விவசாயிகள் கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து 15 நாளில் தீர்வு காண வேண்டும்-மயிலாடுதுறை குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்!

admin See author's posts

எலட்ரிக் ஸ்கூட்டரில் தீ விபத்து: உயிர் தப்பிய தந்தை, மகன்!

admin See author's posts

நாகை அருகே தேர் சக்கரத்தில் சிக்கி பலியான இளைஞருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்

admin See author's posts

மே 1ல் மக்களாட்சி மணம் வீசட்டும் – முதலமைச்சர் வாழ்த்து

admin See author's posts

You cannot copy content of this page