20th September 2021

பாரா ஒலிம்பிக் இந்திய கேப்டன் மாரியப்பனுடன் பிரதமர் உரையாடல்!

பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள இந்திய அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு மற்றும் அவரது குடும்பத்தார் உடன் பிரதமர் மோடி உரையாடினார்.வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கும் பாரா ஒலிம்பிக் போட்டியில், இந்திய அணிக்கு தலைமையேற்று போட்டியில் கலந்து கொள்ள உள்ள தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலுவுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக கலந்துரையாடினார். தொடர்ந்து சேலத்தில் உள்ள அவரது தாயார் சரோஜா, அக்காள் சுதா, தம்பிகள் குமார், கோபி ஆகியோருடனும் பிரதமர் மோடி பேசினார்.பெங்களூருவில் உள்ள மாரியப்பனிடம் பிரதமர் மோடி பேசும்போது, ‘நடைபெற உள்ள போட்டியில் தங்கப்பதக்கம் வெல்லவேண்டும்,’ என்று வாழ்த்தினார். அப்போது மாரியப்பன் பேசுகையில், ”சிறுவயது முதல் நான் கஷ்டப்பட்டு படித்தேன். விளையாட்டில் ஆர்வம் இருந்ததால் அதிலும் பயிற்சி எடுத்தேன். உயரம் தாண்டுதலில் எனக்கிருந்த ஆர்வத்தை கண்ட சாய் விளையாட்டு விடுதி அதிகாரிகள் எனக்கு பயிற்சி அளித்தனர். இதனால் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் பெறமுடிந்தது.

அதிகாரிகளின் ஒத்துழைப்பால் முன்னேறி உள்ளேன்,” என்றார். பிரதமர் பதிலளிக்கையில், ‘மாரியப்பன் நாட்டிற்கு நற்பெயர் எடுத்து தரவேண்டும்,’ என்றார்.தொடர்ந்து சேலம் பெரியவடகம்பட்டியில் உள்ள மாரியப்பனின் தாயார் சரோஜா, பிரதமர் மோடியிடம் பேசினார்.தாயார் சரோஜா: இந்தியா மீண்டும் தங்கப் பதக்கத்தை என் மகன் மூலம் பெறவேண்டும் என்று இறைவனை பிராத்தித்துக்கொள்கிறேன்.பிரதமர் மோடி: நல்ல பிள்ளையை பெற்றெடுத்துள்ளீர்கள், மகிழ்ச்சி அடைகிறேன். மாரியப்பன் என்ன விரும்பி சாப்பிடுவார்?சரோஜா: நாட்டுக்கோழி மற்றும் சூப் விரும்பி சாப்பிடுவார்.மோடி: உங்கள் மகனை சந்தோஷமாக பார்த்துக்கொள்ளுங்கள்.பின்னர் மாரியப்பனின் சகோதரர்கள் குமார் மற்றும் கோபியுடன் உரையாடினார்.குமாரிடம் பிரதமர் மோடி: மாரியப்பனுக்கு என்ன செய்யவேண்டும்?குமார்: மேலும் பல பரிசுகளை இந்தியா பெறவேண்டும் என விரும்புகிறேன்.கோபியிடம் பிரதமர்: உன் மனதில் என்ன உள்ளது?கோபி: மாரியப்பன் மீண்டும் தங்கப்பதக்கம் பெறவேண்டும்.மோடி: மாரியப்பன்போல் நீங்களும் பயிற்சி எடுத்துக்கொண்டு வெற்றிபெற வேண்டும்.மீண்டும் மாரியப்பனிடம் பேசிய பிரதமர் மோடி, ‘மாரியப்பன் மீண்டும் உன்னை பாராட்டுகிறேன். உனது தம்பிகள் முன்னேற முடிந்தளவு உதவுகிறேன்.

தேசத்திற்கு உழைத்து வெற்றிபெற வாழ்த்துகிறேன்,’ எனக் கூறினார்.பின்னர் வீரர்கள் மத்தியில் பிரதமர் பேசுகையில், அப்போது பிரதமர் பேசுகையில், கோவிட், உங்களுக்கு பல இடர்பாடுகளை கொடுத்திருக்கலாம். ஆனால், உண்மையான விளையாட்டு வீரர்கள் எதையும் விட்டு கொடுக்க மாட்டார்கள். உங்கள் வெற்றி, உங்களது பதக்கம் மிகவும் முக்கியம். ஆனால், பதக்கம் வெல்ல வேண்டும் என வீரர்களுக்கு புதிய இந்தியா நெருக்கடி தராது. நீங்கள், உங்களது முழு திறமையையும் வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

More News

மயிலாடுதுறையில் மருத்துவர், செவிலியர்களுக்கு சேவை செம்மல் விருது

admin See author's posts

நவம்பர் 18-ம் தேதி தியாக திருநாளாக கொண்டாடப்படும்..!!

admin See author's posts

நீலகிரி: கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் மதுபானம்!

admin See author's posts

கடலூர் மாவட்டம் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் அருகே கழுத்தை அறுத்து வாலிபர் படுகொலை!

admin See author's posts

தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வேலைவாய்ப்பு!

admin See author's posts

நடிகை மீரா மிதுன் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு!

admin See author's posts

மயிலாடுதுறை: நெல் கொள்முதல் நிலையம் திறக்க அனுமதி வழங்கப்படாததால் மூங்கில் தோட்டம் கடைவீதியில் விவசாயிகள் திடீர் சாலை மறியல்!

admin See author's posts

மதுபானங்களின் விலை உயர்வு அமலுக்கு வந்தது; மதுப்பிரியர்கள் அதிர்ச்சி!

admin See author's posts

சீா்காழியில் நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை சாா்பில் பாரம்பரிய நெல் திருவிழா!

admin See author's posts

மனைவி மறைவால் கண் கலங்கிய ஓபிஎஸ்: கைகளைப் பிடித்து ஆறுதல் கூறினார் சசிகலா!

admin See author's posts

You cannot copy content of this page