பழனி முருகனுக்கு நவபாஷாண சிலை செய்த ஸ்ரீ மஹா போகர் சித்தரின் வரலாறு!

போகர் சீன தேசத்தை சேர்ந்தவர் என்றும் புலிப்பாணியின் குரு என்றும் அகத்தியர் கூறுகிறார்.

இறந்தவர்களைப் பிழைக்க வைக்கும் சஞ்சீவினி மந்திர சக்தியைப் பெற மேருமலையின் அருகிலிருக்கும் நவநாத சித்தர்கள் சமாதியை அடைந்தார்.  அவர்களை வேண்டினார்.  ஒன்பது சித்தர்களும் போகருக்கு தரிசனம் கொடுத்தனர்.  அவர்களிடம், இறந்தவர்களைப் பிழைக்க வைக்கும் சஞ்சீவினி மந்திர வித்தையைக் கற்றுத்தர வேண்டினார். அவர் கேட்டுக் கொண்டபடி அவர் அறிந்திராத காய கல்ப முறைகளையும் அவருக்கு கற்றுக் கொடுத்துவிட்டு மறைந்து விட்டனர்.
அவர்கள் அவற்றைக் கற்றுக் கொடுக்கும்போது “தகுதியுள்ளவர்களுக்கு காயகல்ப முறையைச் சொல்லிக்கொடு, இதன்மூலம் அவர்களை நீண்ட நாள் வாழ வை.  மரணமடைந்தவர்கள் மனதை குழப்பிக் கொள்ளாதே” என்று கூறினர்.
பின்னர் போகர் எவ்வித இலக்கும் இல்லாமல் கால் போன போக்கில் போய்க் கொண்டிருந்தார். சிறிது தூரத்தில் ஒரு புற்றிலிருந்து ஒளிக் கற்றை ஒன்று புலப்பட்டது. ஒளி வந்த அந்த இடத்திற்கு சென்றார்.
புற்றில் ஒரு சித்தர் தவம் செய்து கொண்டிருப்பதை அறிந்து சுற்றி வலம் வந்து வணங்கி அதன் அருகிலேயே அமர்ந்து தவத்தில் ஆழ்ந்தார். அவருடைய ஆழ்ந்த தவம் புற்றில் இருந்த சித்தரின் தவத்தைக் கலைத்தது.  அவர் புற்றில் இருந்து வெளியே வந்தார்.
போகர் அவரிடம், “தங்களை தரிசித்த தன் வாழ்வின் பெரும் பயனைப் பெற்றேன்” என்று கூறி அவரை வணங்கினார்.  சித்தர் அங்கிருந்த மரங்களில் ஒன்றைக் காட்டி அந்த மரத்தின் பழங்களில் ஒன்றைச் சாப்பிட்டால் ஆயுள் முழுவதும் பசிக்காது,  முடி நரைக்காது,  பார்வை மங்காது,  முதுமை வராது, தவம் செய்தவர்களுக்கும் துணைசெய்யும் அவர் கூறியவாறு அந்த மரத்தின் பழத்தை சாப்பிட்டார்.
சித்தர் புலித்தோல் ஆசனம் ஒன்றைக் கொடுத்து “இது உனக்குத் தவம் செய்ய உதவும்” என்றார்.  அப்போது அவர் எதிரே பதுமை ஒன்று தோன்றியது.
“போகா” இனி உனக்குத் தேவையானவைகளை இந்த பதுமை சொல்லும்”  என்று சொல்லிவிட்டு மறுபடியும் அவர் தவத்தில் அமர்ந்துவிட்டார்.
அந்தப் பதுமை அவருக்கு மூலிகை ரகசியங்கள்,  உயிரின் தோற்றம்,  அது உடல் எடுக்கும் விதம்,  அந்த உடலில் அது படும் துன்பம் ஆகிய நிலைகளைத் தெளிவாக உணர்த்தியது.   அதை கூறிவிட்டு, அந்த பதுமை மறைந்துவிட்டது.
பொதிகை மலைச்சாரலில் போகர் தங்கியிருந்த போது ஒரு நாள் இரவு உணவு சமைத்து சாப்பிட்ட பின் தண்ணீருக்காக அருகிலுள்ள ஒரு கிராமத்திற்கு சென்றார்.  அங்கு அந்தணர்கள் பலர் அமர்ந்து வேதம் ஓதிக் கொண்டிருந்தனர்.  அவர்களிடம் போகர் சென்று தாகத்திற்கு தண்ணீர் கேட்டார்.
அவர்கள் போகரிடம் “இங்கிருந்து செல்,  நீ அருகில் வந்தாலே நாற்றம் அடிக்கிறது” என்று அவரை விரட்டினார்கள்.
தாகத்திற்கு தண்ணீர் கொடுக்காத அவர்களுக்கு பாடம் புகட்ட,   போகர் ஒரு வேலை செய்தார்.   அந்த வழியாக ஓடி வந்த ஒரு பூனையை நிறுத்தி அதன் காதில் வேதத்தை ஓதிவிட்டார்.   பூனை அவர்கள் அருகில் சென்று உட்கார்ந்து கொண்டு உரத்த குரலில் வேதத்தை ஓதத் தொடங்கியது.
அப்போதுதான் அந்தணர்களுக்கு நாம் தவறு செய்து விட்டோம் என்று தோன்றியது.   தாங்கள் செய்த அவமதிப்பை பொறுத்தருளும்படி வேண்டினர்.   அத்துடன் தங்கள் வறுமை நீங்க வழி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
போகர் அவர்களின் வீடுகளில் இருந்த உலோகங்களால் ஆன பொருட்களை எல்லாம் தன்னிடம் இருந்த ஆதி ரசத்தால் பொன்னாக மாற்றி அவர்களை மகிழ்வித்தார்.
தன்னிடமிருந்த ரசமணி குளிகைகளை மற்ற சித்தர்களுக்கும் அளிக்க எண்ணினார்.   அதற்காக ரோமாபுரி செல்ல நினைத்தார்.   உடனே தன்னிடம் இருந்த குளிகைகளில் ஒன்றை வாயில் போட்டுக் கொண்டார்.   சிறிது நேரத்தில் அவர் ரோமாபுரியில் இருந்தார்.   அந்த குளிகையின் மகத்துவம் அது!
அங்கு ரச கிணற்றை கண்டுபிடித்து இரசத்தை சுரைக் குடுவையில் நிரப்பிக் கொண்டு ஆகாயமார்க்கமாக பொதிகை மலைக்கு வந்து சேர்ந்தார்.
தஞ்சையில் பிரகதீசுவரர் ஆலய லிங்கப் பிரதிஷ்டை செய்ய கருவூரார் அங்கு செல்ல வேண்டும் என்ற செய்தியை காக்கையின் கழுத்தில் ஓலை ஒன்றை கட்டி அதன் மூலம் தகவலை அனுப்பி வைத்தார்.  கருவூராரும் அதன் படியே செய்து லிங்கப் பிரதிட்டை செய்து முடித்தார்.
பின்னர் போகர்,  தட்சிணாமூர்த்தி கோலத்தில் சிவபெருமான் பார்வதிக்கு அருளிய ஞான விளக்கம் ஏழு சட்சத்தையும், ஏழு காண்டமாக்கி, தமது மாணவர்களுக்கு உபதேசித்தார்.  மற்ற சித்தர்கள் இறைவன் உபதேசித்து வெளியில் சொல்வது குற்றம் என்று கூறி அதை நிறுத்த வேண்டும் என்று இறைவனிடம் முறையிட்டனர்.

தட்சிணாமூர்த்தி ஆகிய சிவபெருமான்,  அவரை வரவழைத்து இது குறித்து விசாரித்தார். அந்த நூலை சொல்ல சொல்லி கேட்டு அதன் ஆழத்தையும் சிறப்பையும் கண்டறிந்து மகிழ்ந்து அவரை வாழ்த்தினார்.
பின்னர் போகர் முருகப்பெருமானை நினைத்து ஆழ்ந்த தவத்தில் ஈடுபட்டார்.   அவருடைய தவத்தை மெச்சிய முருகபெருமான் அவருக்கு காட்சியளித்து பழனி மலையில் தன்னை மூலவராக வடிவமைத்து விக்கிரகமாகச் செய்து அதை எப்படி பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்பதையும் கூறி காரியசித்தி உபாயத்தையும் அவருக்கு உபதேசித்து மறைந்தார்.
போகருக்கு 63 சீடர்கள் இருந்தனர்.   அவர்களில் முக்கியமானவர்கள் கோரக்கர்,  கொங்கணவர்,  புலிப்பாணி,  கருவூரார் ஆகியோர் அவர்களில் புலிப்பாணி மற்றும் கோரக்கர் உதவியுடன் போகர் முருகனின் நவபாஷான சிலை செய்ய ஆரம்பித்தார்.
நவ பாஷாணம் என்பது ஒன்பது பாஷானத்தை குறிக்கும்.   இதை கட்டுவது என்பது மிகப்பெரிய விஷயம்.   ஒவ்வொரு பாஷாணமும் ஒவ்வொரு விதமாக ஒவ்வொரு பலத்துடன் இருக்கும்.
இவற்றை சரியான முறையில் சேர்த்து பிசைந்தால் தான் உறுதியான ஒரு பொதுவான பாஷாணம் உருவாகும்.
இதைக் கண்களால் பார்த்தால் கூட அதிலிருந்து வெளிப்படும் நுட்பமான கதிர்வீச்சு கண்வழியாக உடம்பின் உள்ளும் புறமும் படிந்து நோய்களை போக்கும் இதில் பட்டு வழியும் எந்த பொருளும் மருத்துவ குணம் அதிகம் உள்ளதாக எல்லா நோய்களையும் தீர்க்க கூடியதாக இருக்கும்.
மற்றுமொரு சிறப்பு மனிதப்பிறவி கோள்களால் நிர்வகிக்கப்படுகிறது.   எனவே அந்த ஒன்பது கோள்களும் நவகிரகங்களின் குணங்களைக் கொண்ட ஒன்பது பாஷாணத்தை தேர்வு செய்து அதில் இருந்து பழனி தண்டாயுதபாணி சிலை செய்யப்பட்டது.  பழனி முருகனை தரிசனம் செய்தவர்கள் நவகிரகங்களையும் ஒன்றாக தரிசித்த பலன் பெறுவார்கள்.  அந்த கோள்களால் ஏற்படும் துன்பங்களும் முருகன் அருளால் மறையும்.
இதில் எட்டு பாசனத்தை கட்டிவிட்டார்.  ஒன்பதாவது பாஷானத்தை கட்டினால் மட்டுமே பாஷாண விஷம் முறியும் ஒன்பதாவது பாசனத்திற்கு தேவையான மூலிகை சீனாவில் இருக்கலாமென அதைத் தேடிப் புறப்பட்டார்.
போகர் ககன குளிகையின் மூலம் ஆகாயமார்க்கமாக பறந்து செல்லும் ஆற்றல் பெற்றவர்.

ஆகாயமார்க்கமாக பறந்து சென்ற போகர் சீன தேசத்தில் இறங்கி மூலிகைகள் தேட ஆரம்பித்தார். ஆனால் யாது காரணத்தாலோ அவர்தான் சித்தர் என்பதையும் மறந்து தான் சாதாரண மனிதரைப்போல் இல்லற வாழ்வில் ஈடுபட்டார். இதனால் அவரிடம் இருந்து எல்லா சக்திகளும் அவரை விட்டுப் போய் விட்டன.

போகரின் சீடர் புலிப்பாணி தன் குருநாதர் ஆகாய மார்க்கமாக சென்று பல காலமாகியும் வரவில்லையே என்று நினைத்து அவரை தேடி ஆகாய மார்க்கமாக புறப்பட்டு  சென்று சீனாவில் அவரைக் கண்டுபிடித்தார்.

 குரு போகர் எல்லா சக்திகளையும் இழந்து வந்த காரணத்தால் அவரை புலிப்பாணி தன் முதுகின் மீது ஏற்றிக்கொண்டு ஆகாய மார்க்கமாக தங்களது இருப்பிடமான பழனி மலை அருகிலுள்ள கன்னிவாடி மலை வந்தடைந்தார்.

தன்னுடைய எல்லா சக்திகளையும் இழந்து தன் குருவின் நிலை கண்டு புலிபாணி வருந்தினார்.  அவருக்கு ஆறுதல் கூறி நான் உனக்கு கற்றுக்கொடுத்த எல்லா சித்திகளையும் நீ குருவாக இருந்து எனக்கு போதித்தால் நான் மீண்டும் எல்லா சக்திகளையும் பெறுவேன் என்றார் எனினும் புலிப்பாணி தன் குருவை தன் சீடராக ஏற்றுக்கொள்ள மனம் ஒப்பவில்லை.
போகர் புலிப்பாணி இடம் தந்தைக்கு உபதேசித்த முருகப் பெருமானின் புராணத்தை கூறினார்.
பிறகு இருவரும் ஒரு முடிவுக்கு வந்தனர்.  அதன்படி தண்டம் ஒன்றை நிறுவி அதற்கு புலிப்பாணி அனைத்து கலைகளையும் உபதேசிக்க அதன் அருகில் அமர்ந்து போகர் அவற்றை கேட்டு தான் இந்த சக்திகள் அனைத்தையும் பெற்றார்.
பிறகு ஒன்பதாவது பாஷாணத்தை கட்டி முடித்து முருகன் சிலையை செய்தார்.
இந்த நவபாஷானம் கட்டுவதில் தன்வந்திரி சித்திரம் ஈடுபட்டிருந்தார்.  தன்வந்திரி மருத்துவ உலகில் அகத்தியருக்கு அடுத்த நிலையில் இருந்தவர் இவரால் 8 பாஷாண மட்டுமே கட்டி முடிக்க முடிந்தது.
அதற்குள் போகர் ஒன்பதாவது பணத்தையும் கட்டி விட்டதால் தான் முயற்சி செய்ய வேண்டியதில்லை என்று தன்வந்திரி தான் கட்டிய 8 பாஷானதையும் குளத்தில் கொட்டி விட்டார்.
உடனே மகேஸ்வரன் தோன்றி கவலைவேண்டாம் போகர் பழனியில் கட்டியதை தரிசித்தால் அதில் வரும் அபிஷேக பொருட்களை உண்டால் நோய்கள் நீங்கும் என்றும் நீ குளத்தில் கொட்டி விட்டதால் இந்த குளத்தில் குளித்தால் அவருடைய எல்லா நோய்களும் தீரும் என்றும் அருளினார்.   மேலும் யாம் அங்கு வைத்தீஸ்வரன் ஆக எழுந்தருளி அருள் புரிவான் என்று அருளி மறைந்தார்.  அந்த இடம்தான் வைத்தீஸ்வரன் கோவில்.
போகர் இறைவன் திருமேனியைத் தழுவி ஊறி வந்த பஞ்சாமிர்தத்தையே உணவாகக் கொண்டு வாழ்ந்து வந்தார். நவபாஷாணங்கள் சேர்ந்து உருவாக்கிய திருமேனியில் உரிய விபூதியும் பஞ்சாமிர்தமும் போகருக்கு உள்ளொளியை பெருக்கியது.
பழனியில் வாழ்ந்த போகர் அங்கேயே சமாதியடைந்தார்.  அவருடைய சமாதி பழனி ஆண்டவர் ஆலயத்தின் உட்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் உள்ளது.  போகர் பூசித்து வந்த புவனேச்வரி அம்மையின் திருவுருவம் பழனியாண்டவர் சந்நிதியில் இன்றும் உள்ளது.

போகரின் சமாதி அமைந்துள்ள இடத்திற்கும் புவனேச்வரி அம்மன் சந்நதிக்கும் இடையே சுரங்கப் பாதை ஒன்றிருப்பதாக கூறப்படுகிறது. சதுரகிரி தலபுராணத்தில் இந்த செய்திகள் உள்ளன.

 போகரை சமாதியில் வைத்தது அவருடைய சீடர்களில் ஒருவரான கோரக்கர்.   தன்னை பழனியில் சமாதியில் வைத்துவிட்டு வடக்கு பொய்கை நல்லூர் செல்ல கோரக்கரை போகர் அறிவுறுத்தினார். அதன்படி கோரக்கரும் போகர் பழனியில் சமாதியை அமைத்து வடக்கு பொய்கைநல்லூர் சென்றார்.  போகர் பின்பு சமாதியில் இருந்து எழுந்து வடக்கு பொய்கை நல்லூர் சென்று கோரக்கரை அந்த சமாதியில் வைத்தார் என்று கூறப்படுகிறது.

போகர் அருளினால் மட்டுமே பழனிக்கு வந்து முருகர் தரிசனம் செய்ய இயலும் என்கிறார்கள்.

More News

சார் பதிவாளர்கள் இனி உயர்ந்த மேடையில் அமரக்கூடாது – வணிகவரித்துறை!

admin See author's posts

அகத்திய முனி வரலாறு மற்றும் வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்!

admin See author's posts

நடிகர் சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு மயிலாடுதுறையில் மதிய உணவு வழங்கப்பட்டது!

admin See author's posts

மயிலாடுதுறையில் ரிங் ரோடு பணி விரைவில் துவங்கும்!

admin See author's posts

மயிலாடுதுறையில் குழந்தைகளை பாதுகாப்பதற்கான நியூமோகோக்கல் கான்ஜீகேட் தடுப்பூசி வழங்கும் விழா!

admin See author's posts

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள் அறிவிப்பு!

admin See author's posts

12ம் வகுப்பில் கூடுதல் மதிப்பெண் பெற விருப்பத் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கியது..!!

admin See author's posts

பயனாளர்களின் தகவல்களை பகிர மாட்டோம்.. இறங்கிவந்த வாட்ஸ்அப் நிறுவனம் !!

admin See author's posts

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்கள்!

admin See author's posts

விவசாயிகளுக்கு உழவு இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி!

admin See author's posts

You cannot copy content of this page