மயிலாடுதுறை அருகே காதலர் தினத்தில் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடிக்கு போலீஸ் பாதுகாப்பு!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மாதானத்தை சேர்ந்த சிவசண்முகம்என்பவர் குமரக்கோட்டம் பகுதியை சேர்ந்த விஜய லட்சுமி என்பவரை கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இருவரும் தங்களது பெற்றோரிடம் கூறி திருமணம் செய்து வைக்க கேட்டதற்கு விஜயலட்சுமி வீட்டார் மறுத்துவிட்டனர்.

தொடர்ந்து மறுத்துவந்த நிலையில் இன்று காலை இருவரும் வீட்டைவிட்டுக் கிளம்பி வைத்தீஸ்வரன்கோயில் மாரியம்மன் ஆலயத்திற்குச் சென்று அங்கே மாலை மாற்றி தாலி கட்டி திருமணம் செய்துகொண்டனர். தங்களது குடும்பத்தாரால் ஆபத்து ஏற்படும் என்று பயந்த தம்பதியினர் உடனடியாக மயிலாடுதுறை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சுகுணசிங் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்தனர்.

இவர்கள் வசிக்கும் பகுதி புதுப்பட்டினம் காவல்நிலைய ஆய்வாளர் சந்திரா என்பவர் மீட்டிங் ஒன்றிற்கு எஸ்.பி அலுவலகத்திற்கு வந்திருந்தார். அவரை எஸ்.பி. அழைத்து இரண்டு வீட்டாரையும் அழைத்துப் பேசி சமாதானமாகப் போக செய்யவேண்டும் என வலியுறுத்தினார், தகராறு ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

காதல் திருமணம் செய்த தம்பதியினர் போலீசாருடன் இணைந்து புகைப்படம் எடுத்துச் சென்றனர். காதலர் தினமான இன்று 7 ஆண்டு காதலுக்கு முடிவுகண்ட திருப்தியில் ஜோடியினர் மகிழ்ச்சியாக சென்றனர்.

More News

மயிலாடுதுறையில் வண்ணான் குளத்தை சுற்றி நடைபயிற்சி மேடை, பூங்கா அமைக்கும் பணி!

admin See author's posts

`கூடிய விரைவில் தமிழ்நாட்டை கருணாநிதி நாடு என பெயர் மாற்றுவார்கள்’- ஜெயக்குமார் காட்டம்

admin See author's posts

ஜெர்மனி சென்றடைந்தார் பிரதமர் மோடி: சிவப்பு கம்பள வரவேற்பு!

admin See author's posts

பிரசாந்த் கிஷோர் அரசியல் கட்சி தொடங்க திட்டம்?.. மக்களிடம் நேரடியாக செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என ட்வீட்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஏ.ஐ.டி.யூ.சி.- விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மே தின ஊர்வலம்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் மே தின கிராம சபை கூட்டம் நடந்தது!

admin See author's posts

விவசாயிகள் கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து 15 நாளில் தீர்வு காண வேண்டும்-மயிலாடுதுறை குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்!

admin See author's posts

எலட்ரிக் ஸ்கூட்டரில் தீ விபத்து: உயிர் தப்பிய தந்தை, மகன்!

admin See author's posts

நாகை அருகே தேர் சக்கரத்தில் சிக்கி பலியான இளைஞருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்

admin See author's posts

மே 1ல் மக்களாட்சி மணம் வீசட்டும் – முதலமைச்சர் வாழ்த்து

admin See author's posts

You cannot copy content of this page