புதுச்சேரியில் நாளை முதல் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு

புதுச்சேரியில் ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது . தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கள் கிழமை காலை 5 மணி வரை முழுஊரடங்கு அமலில் இருக்கும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில் கொரோனா பதிப்பு 50000ஐ கடந்தது . மேலும் இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 987 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் புதுச்சேரியில் 837 நபர்களுக்கும், காரைக்காலில் 89 நபர்களுக்கும், ஏனாமில் 40 நபர்களுக்கும், மாஹேவில் 21 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது 5923 நபர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 43,931 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

மேலும் புதுச்சேரியில் 3 பேரும் காரைக்காலில் 1 நபரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் மாநிலத்தில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 726 ஆக உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக மநிலத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50,580ஆக உள்ளது. முதன்முறையாக புதுச்சேரியில் 987 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் புதுச்சேரியில் வெள்ளிகிழமை இரவு முதல் வார இறுதி நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதற்கான ஊரடங்கு கட்டுப்பாடுகளை புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இரவு ஊரடங்கு இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை காலை 5 மணி வரை அமலில் இருக்கும்.

திங்கட்கிழமைக்கு பிறகு கடைகள், நிறுவனங்கள், வர்த்தக மையங்கள் மதியம் 2 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும், திருமணங்களை நூறு பேரைக் கொண்டு நடத்த வேண்டும்,

இறுதி ஊர்வலத்தில் 50 பேருக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பது போன்ற கட்டுபாடுகளையும் அரசு விதித்துள்ளது. மத வழிபாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டாலும், கோயில்கள் திறந்து வழக்கமான பூஜைகள் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. ஓட்டல்கள், உணவு கூடங்கள் 50 சதவீத இருக்கையுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதே போல் மதுபான கடைகளுக்கு கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் அனைத்து மதுபான கடைகளும் மதுபானம் வழங்கும் பார்கள் மற்றும் ஓட்டல்கள் 26 ஆம் தேதி முதல் மதியம் 2 மணிக்குள் மூடவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை வெள்ளிகிழமை 23 ம் தேதி வார இறுதி ஊரடங்கு காரணமாக வெள்ளிகிழமை இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை காலை 5 மணி வரை மூடியிருக்க வேண்டும் என கலால் துறை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More News

மயிலாடுதுறை ஜேசிஐ டெல்டா சார்பில் கபாசுரக் குடிநீர்

admin See author's posts

அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று உறுதி!

admin See author's posts

கொரோனா கட்டளை மையம் அமைக்கப்பட்டு அதற்கான அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு

admin See author's posts

கொரோனாவால் பலியான மதுரை கர்ப்பிணி மருத்துவர் சண்முகப் பிரியா-. முன்களப் பணியாளர்கள் கடும் அதிர்ச்சி

admin See author's posts

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது மோட்டார் வாகனச் சட்டப்படி நடவடிக்கை: அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி

admin See author's posts

தமிழகத்தில் வரும் 10ந் தேதி முதல் 24ந் தேதி வரை முழு ஊரடங்கு

admin See author's posts

தமிழகத்தில் புதிய உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 197 பேர் உயிரிழப்பு

admin See author's posts

கடும் கட்டுப்பாடுகளுடன் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கை அறிவித்தது கர்நாடக அரசு

admin See author's posts

புதிய தலைமை செயலாளராக இறையன்பு ஐ.ஏ.எஸ். நியமனம்

admin See author's posts

கமலின் கட்சி நிர்வாகிகள் பதவி விலகலின் பரபர பின்னணி…

admin See author's posts

You cannot copy content of this page