மயிலாடுதுறையில் பொங்கல் பரிசு விவகாரம்: நியாய விலை கடை விற்பனையாளர் தற்காலிக பணி நீக்கம்!

பொங்கல் பரிசு மற்றும் தரமற்ற அரிசி வழங்கிய நியாயவிலை கடையை கடந்த 28ம் தேதி முற்றுகையிட்ட பொதுமக்கள்,நியாய விலை கடை விற்பனையாளர் தற்காலிக பணி நீக்கம் செய்து செம்மங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.கடந்த 28ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த சட்டநாதபுரம் அரசு நியாயவிலைக் கடையில் அப்பகுதி மக்கள் 200க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

2022ஆம் ஆண்டு தமிழக அரசியல் பொங்கல் பரிசு தொகுப்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு முறையாக வழங்காததால் மற்றும் புழு பூச்சி உள்ள தரமற்ற அரிசியை வழங்கியதை கண்டித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர், அரசு வழங்கிய 21 பொருட்களும் வழங்காமல் வழங்கப்படாத பொருட்களுக்கு துண்டுச் சீட்டில் எழுதிக் கொடுத்து மற்றொரு நாளில் பெற்றுக்கொள்ள அறிவித்துள்ளதை கண்டித்தும் பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் வட்ட வழங்கல் துறை அலுவலர்கள் பொது மக்களிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததன் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.இந்த சம்பவம் செய்திய்யாக வெளியானதை அடுத்து செம்மங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் 2022ஆம் ஆண்டு தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை முறையாக வழங்கத் தவறியது, இருப்பு குறைவு ஏற்படுத்தியது.

அன்றாட விற்பனை தொகையை முறையாக சங்கத்தில் செலுத்த தவறியது உள்ளிட்ட காரணங்களுக்காக சட்டநாதபுரம் நியாய விலை கடை விற்பனையாளர் சக்கரவர்த்தியை தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்த செம்மங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

More News

மயிலாடுதுறையில் வண்ணான் குளத்தை சுற்றி நடைபயிற்சி மேடை, பூங்கா அமைக்கும் பணி!

admin See author's posts

`கூடிய விரைவில் தமிழ்நாட்டை கருணாநிதி நாடு என பெயர் மாற்றுவார்கள்’- ஜெயக்குமார் காட்டம்

admin See author's posts

ஜெர்மனி சென்றடைந்தார் பிரதமர் மோடி: சிவப்பு கம்பள வரவேற்பு!

admin See author's posts

பிரசாந்த் கிஷோர் அரசியல் கட்சி தொடங்க திட்டம்?.. மக்களிடம் நேரடியாக செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என ட்வீட்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஏ.ஐ.டி.யூ.சி.- விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மே தின ஊர்வலம்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் மே தின கிராம சபை கூட்டம் நடந்தது!

admin See author's posts

விவசாயிகள் கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து 15 நாளில் தீர்வு காண வேண்டும்-மயிலாடுதுறை குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்!

admin See author's posts

எலட்ரிக் ஸ்கூட்டரில் தீ விபத்து: உயிர் தப்பிய தந்தை, மகன்!

admin See author's posts

நாகை அருகே தேர் சக்கரத்தில் சிக்கி பலியான இளைஞருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்

admin See author's posts

மே 1ல் மக்களாட்சி மணம் வீசட்டும் – முதலமைச்சர் வாழ்த்து

admin See author's posts

You cannot copy content of this page