26th October 2021

12 மாவட்டங்களின் செயல்பாடு மோசம் – தலைமைச் செயலர் இறையன்பு வேதனை..!

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை தமிழக அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. அதன்படி, ஏற்கனவே 2 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்ட நிலையில், கடந்த 26ம் தேதி 3வது மெகா தடுப்பூசி முகாமை நடத்தியது.

மாநிலம் முழுவதும் சுமார் 20 ஆயிரம் மையங்களில் நடந்த இந்த முகாமில் 24.85 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிட்டிருந்த நிலையில், ஏறக்குறைய 25 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தியது பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், தடுப்பூசி முகாம்களின் செயல்பாடுகள் தொடர்பாக தலைமைச் செயலர் இறையன்பு, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், கோவை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருச்சி மாவட்டங்களில் தடுப்பூசி முகாம்கள் வெகு சிறப்பாக நடைபெற்றது” என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், பெரம்பலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்பட 18 மாவட்டங்களில் தடுப்பூசி முகாம்களின் செயல்பாடுகள் திருப்தியாக இருந்ததாகவும், சிவகாசி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கடலூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, புதுக்கோட்டை, அறந்தாங்கி, அரியலூர், வேலூர், ராமநாதபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் நடைபெற்ற தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மிகவும் மோசமாக இருந்தாகவும் குற்றம் சாட்டி உள்ளார்.

மேலும், மாவட்ட ஆட்சியர்கள் தடுப்பூசி செலுத்தும் பணிகளை ஒழுங்குபடுத்தி, விரைவுபடுத்த வேண்டும், தடுப்பூசி பற்றாக்குறை உட்பட வேறு ஏதேனும் சிரமங்கள் இருந்தால், அதை நீங்கள் எனது கவனத்திற்கு கொண்டு வரலாம் என்று தெரிவித்துள்ளதுடன், நாம் ஒன்றாக சேர்ந்து நமது மாநிலத்தை தடுப்பூசி போடுவதில் முன்னணி மாநிலமாக மாற்றுவோம் என்று கூறியுள்ளார்.

More News

மயிலாடுதுறையில் மோடி கையெழுத்துடன் முன்களப் பணியாளர்களுக்கு வாழ்த்து அட்டை வழங்கல்!

admin See author's posts

கொள்ளிடம் அருகே பண்ணையில் தீ விபத்து; 500 கோழிகள் கருகி சாவு!

admin See author's posts

செம்பனார்கோவில்: கேட்டரிங் சர்வீஸ் அலுவலகத்தில் பிணமாக கிடந்த ஊழியர்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுநூலக கட்டிடம், பள்ளி கட்டிடம், பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்!

admin See author's posts

சித்தர்காடு அருகே, கிணற்றில் விழுந்த காளையை மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு பாராட்டு!

admin See author's posts

திருவாரூர்: கனமழையால் இடிந்து விழுந்த தியாகராஜர் கோயில் கமலாலயம் குளத்தின் சுற்றுச் சுவர்!

admin See author's posts

சீர்காழி அருகே ஏரி மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் ஆகாய தாமரையால் மூடிய அவலம்!

admin See author's posts

மயிலாடுதுறை சின்னமேடு மீனவ கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்க கல் சுவர் எழுப்புவதற்கு பூமி பூஜை போடப்பட்டது!

admin See author's posts

தமிழக அரசின் பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை காவிரியில் எழுந்தருளிய பரிமள ரெங்கநாதர்!

admin See author's posts

You cannot copy content of this page