30th November 2021

முதல் முயற்சியிலேயே நீட் தேர்வில் 439 மதிப்பெண் பெற்று போரூர் அரசுப் பள்ளி மாணவி சாதனை!

நீட் தேர்வில் முதல் முயற்சியிலேயே 439 மதிப்பெண்களைப் பெற்று, போரூர் அரசுப் பள்ளி மாணவி ரசிகா மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது.

அதன்படி நடப்பாண்டுக்கான நீட் தேர்வு கடந்த செப்.12-ம் தேதி நடைபெற்றது. இதற்கான முடிவுகள் கடந்த நவ.1-ம் தேதி வெளியாகின. இதில் சென்னையை அடுத்த போரூர் அரசுப் பள்ளியில் படித்த மாணவி எஸ்.ரசிகா, தனது முதல் முயற்சியிலேயே 439 மதிப்பெண் பெற்று திருவள்ளூர் மாவட்ட அளவில் (அரசுப்பள்ளி பிரிவு) முதலிடம் பிடித்துள்ளார்.

இது தொடர்பாக மாணவி எஸ்.ரசிகா கூறும்போது, ‘நீட் தேர்வில் வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எனக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள், பெற்றோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசுப் பள்ளி மாணவர்கள் ஊக்கமுடன் படித்தால் நீட் தேர்வில் வெற்றி பெறலாம். பயிற்சி மையங்களின் உதவி தேவையில்லை. எனது தந்தை லேத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.

மேலும், 7.5 சதவீத இடஒதுக்கீடு இருப்பதால் சென்னை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்” என்றார். மாணவி ரசிகாவுக்கு கல்வித் துறை அதிகாரிகள், வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

More News

மயிலாடுதுறை: நவீன குடும்ப நல சிகிச்சை குறித்த விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் தொடக்கம்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் எலி ஒழிப்பு முகாம் நடத்த விவசாயிகள் கோரிக்கை!

admin See author's posts

மயிலாடுதுறை: அளக்குடி ஊராட்சியில் நிரந்தர தடுப்பு ஏற்படுத்த நடவடிக்கை!

admin See author's posts

மயிலாடுதுறை: குத்தாலம் அருகே இடப்பிரச்சினையில் லாரி டிரைவர் அடித்துக்கொலை!

admin See author's posts

மயிலாடுதுறை: பொறையார் ரோட்டரி சங்கம், தரங்கை பொது தொழிலாளர் சங்கம் மற்றும் முகநூல் நண்பர்கள் சார்பில் பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி!

admin See author's posts

பிரீபெய்டு சேவை கட்டணத்தை 20% வரை உயர்த்துகிறது ஜியோ

admin See author's posts

நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் பெண் தராமல் ஏமாற்றியதாக போலீசில் புகார்!

admin See author's posts

மயிலாடுதுறையில் இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி!

admin See author's posts

‘ஜெய் பீம்’ படத்துக்காக சூர்யாவை நேரில் சந்தித்து பாராட்டிய நல்லகண்ணு” !

admin See author's posts

மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை; மரங்கள் சாய்ந்தன!

admin See author's posts

You cannot copy content of this page