சிவில் சர்வீஸ் நேர்முகத் தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு: யூபிஎஸ்சி அறிவிப்பு

நாட்டில் கரோனா பரவல் தீவிரமடைந்து வருவதால் சிவில் சர்வீஸ் நேர்முகத் தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக, தேர்வை நடத்தும் யூபிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஆட்சிப் பணியின் முக்கியத் தேர்வுகளான ஐஏஎஸ் (Indian Administrative Service), ஐஎஃப்எஸ் (Indian Foreign Service), ஐபிஎஸ் (Indian Police Service) தேர்வுகளை மத்திய குடிமைப் பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது.

நாட்டில் கரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. கோவிட் தொற்றால் தினசரி பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கியுள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்கள் பகுதியளவு ஊரடங்கை அறிவித்து, செயல்படுத்தி வருகின்றன. அதேபோல மத்திய அரசின் பல்வேறு நுழைவு, போட்டித் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சிவில் சர்வீஸ் நேர்முகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக, தேர்வை நடத்தும் யூபிஎஸ்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய குடிமைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”நாட்டில் கரோனா பரவல் காரணமாக சிவில் சர்வீஸ் நேர்முகத் தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. நேர்முகத் தேர்வுகளில் கலந்துகொள்வதற்காக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து தேர்வர்கள் பயணிக்க வேண்டி உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனினும் தேர்வுக்குக் குறைந்தபட்சம் 15 நாட்கள் முன்னதாகப் புதிய தேதிகள் அறிவிக்கப்படும்.

தேர்வர்கள் மற்றும் தேர்வு நடத்துவோரின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தேர்வு தொடர்பான விவரங்களை அறிய யூபிஎஸ்சி இணையதளத்தைத் தொடர்ந்து தேர்வர்கள் பார்க்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு கரோனா அச்சுறுத்தல் காரணமாகப் பலமுறை தள்ளி வைக்கப்பட்ட ஐஏஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான யூபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு கடந்த அக்டோபர் மாதம் நாடு முழுவதும் நடத்தப்பட்டது. முதன்மைத் தேர்வுகளும் நடைபெற்ற நிலையில், நேர்முகத் தேர்வுகள் தற்போது தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More News

11 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் தமிழ்நாடு அரசு உத்தரவு

admin See author's posts

சிறுவனின் சிறுநீரக சிகிச்சைக்கு 25 ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கிய அன்பு அறக்கட்டளை.

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்

admin See author's posts

மயிலாடுதுறையில் உலகயோகா தினம்

admin See author's posts

மயிலாடுதுறை 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க இணையவழி கலந்தாய்வு கூட்டம்

admin See author's posts

அரசு மருத்துவமனைக்கு “குரு-94 “அமைப்பு சார்பில் ஆக்சிஜன் கருவிகள்

admin See author's posts

செம்பனார்கோயில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம்

admin See author's posts

செம்பனார்கோவிலில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் 1000 பேர் பங்கேற்று பயனடைந்தனர்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசணை கூட்டம்

admin See author's posts

தமிழ்நாட்டில் தொற்றின் பாதிப்பை பொறுத்து மாவட்டங்களை 3 வகையாக பிரித்து தளர்வுகள் அறிவிப்பு..!! முழு விவரம்..!!

admin See author's posts

You cannot copy content of this page