புதுச்சேரியில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமலாகிறது

முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவையின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை அடுத்து இது தொடர்பாக புதுச்சேரி அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாக உள்ளது

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து அடுத்தடுத்து எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர். இதனால் நாராயணசாமி அரசுக்கு ஆபத்து ஏற்பட்டது. இதனையடுத்து சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று எதிர்கட்சியினர் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனிடம் கடிதம் அளித்தனர். அதனை ஏற்று நாராயணசாமி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

புதுச்சேரி சட்டசபை பிப்ரவரி 22ஆம் தேதி கூடியது. அவையில் பெரும்பான்மை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்து முதல் அமைச்சர் நாராயணசாமி பேரவையில் உரையாற்றினார். அப்போது சட்டசபைத் தலைவர் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி நியமன உறுப்பினர்களுக்கு வாக்களிக்க உரிமை உள்ளது என தெரிவித்தார். உடனடியாக சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தார் நாராயணசாமி. இதனை அடுத்து அவரது அமைச்சரவை சகாக்களும் வெளியேறினர்.

இதனையடுத்து நாராயணசாமியின் அரசு பெரும்பான்மை இழந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார். இதனை தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி அவரது அமைச்சரவை சகாக்களுடன் துணைநிலை ஆளுநர் மாளிகை சென்று அவர்களது ராஜினாமா கடிதத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனிடம் அளித்தனர். இனி ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் கூறினார் நாராயணசாமி. இதனையடுத்து ராஜினாமா கடிதத்தை துணைநிலை ஆளுநர் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார்.

இந்நிலையில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவையின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. இதனை அடுத்து இது தொடர்பாக புதுச்சேரி அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாக உள்ளது. புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்துவது இது 6வது முறையாகும்.

source: oneindia.com

More News

மயிலாடுதுறை ஜேசிஐ டெல்டா சார்பில் கபாசுரக் குடிநீர்

admin See author's posts

அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று உறுதி!

admin See author's posts

கொரோனா கட்டளை மையம் அமைக்கப்பட்டு அதற்கான அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு

admin See author's posts

கொரோனாவால் பலியான மதுரை கர்ப்பிணி மருத்துவர் சண்முகப் பிரியா-. முன்களப் பணியாளர்கள் கடும் அதிர்ச்சி

admin See author's posts

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது மோட்டார் வாகனச் சட்டப்படி நடவடிக்கை: அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி

admin See author's posts

தமிழகத்தில் வரும் 10ந் தேதி முதல் 24ந் தேதி வரை முழு ஊரடங்கு

admin See author's posts

தமிழகத்தில் புதிய உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 197 பேர் உயிரிழப்பு

admin See author's posts

கடும் கட்டுப்பாடுகளுடன் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கை அறிவித்தது கர்நாடக அரசு

admin See author's posts

புதிய தலைமை செயலாளராக இறையன்பு ஐ.ஏ.எஸ். நியமனம்

admin See author's posts

கமலின் கட்சி நிர்வாகிகள் பதவி விலகலின் பரபர பின்னணி…

admin See author's posts

You cannot copy content of this page