மயிலாடுதுறை அருகே ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகை!



சீர்காழி அருகே சட்டநாதபுரதில் உள்ள ரேஷன் கடையில் 600-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவு பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் நேற்று தரமான அரிசி மற்றும் விடுபட்டவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கக்கோரி ரேஷன் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த வட்ட வழங்கல் அதிகாரிகள் மற்றும் சீர்காழி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது தரமான அரிசி மற்றும் விடுபட்ட பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன்பேரில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.