30th November 2021

மயிலாடுதுறை ஆனந்தக்குடி கிராமத்தில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்!

ஆனந்தக்குடி கிராமத்தில் கடந்த 3 நாட்களாக மின்சாரம் மற்றும் குடிநீர் இல்லாததால் நேற்று காலிக்குடங்களுடன் பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆனந்தக்குடி கிராமத்தில் கடந்த 3 நாட்களாக குறைந்த மின் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.இதனால் பொதுமக்கள் மின் வசதியும், குடிநீர் வசதியும் இல்லாமல் பெரும் அவதி்க்கு உள்ளாகினர்.இதுகுறித்து அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று ஆனந்தக்குடி கிராம மக்கள் காலிக்குடங்களுடன் மயிலாடுதுறை – காளி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு நடந்தே சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின்பேரில், மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

More News

மயிலாடுதுறை: நவீன குடும்ப நல சிகிச்சை குறித்த விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் தொடக்கம்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் எலி ஒழிப்பு முகாம் நடத்த விவசாயிகள் கோரிக்கை!

admin See author's posts

மயிலாடுதுறை: அளக்குடி ஊராட்சியில் நிரந்தர தடுப்பு ஏற்படுத்த நடவடிக்கை!

admin See author's posts

மயிலாடுதுறை: குத்தாலம் அருகே இடப்பிரச்சினையில் லாரி டிரைவர் அடித்துக்கொலை!

admin See author's posts

மயிலாடுதுறை: பொறையார் ரோட்டரி சங்கம், தரங்கை பொது தொழிலாளர் சங்கம் மற்றும் முகநூல் நண்பர்கள் சார்பில் பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி!

admin See author's posts

பிரீபெய்டு சேவை கட்டணத்தை 20% வரை உயர்த்துகிறது ஜியோ

admin See author's posts

நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் பெண் தராமல் ஏமாற்றியதாக போலீசில் புகார்!

admin See author's posts

மயிலாடுதுறையில் இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி!

admin See author's posts

‘ஜெய் பீம்’ படத்துக்காக சூர்யாவை நேரில் சந்தித்து பாராட்டிய நல்லகண்ணு” !

admin See author's posts

மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை; மரங்கள் சாய்ந்தன!

admin See author's posts

You cannot copy content of this page