செம்பனார்கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ரூ.2 கோடிக்கு மறைமுக ஏலம் மூலம் பருத்தி கொள்முதல்!

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடைபெற்ற மறைமுக பருத்தி ஏலத்தில் 3600 குவிண்டால் பருத்தியை வியாபாரிகள் கொள்முதல் செய்தனர்.

குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்சம் ரூ.7789க்கு ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 4586 ஹெக்டேர் நிலப்பரப்பில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது, பருத்தி அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யும் பருத்தியை மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.

அந்தவகையில், மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நாகை விற்பனைக்குழு செயலாளர் ரமேஷ் தலைமையில் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்றது. 1000க்கும் மேற்பட்ட விவசாயிகள் 3,000 குவிண்டால் பருத்தியை விற்பனைக்காக கொண்டுவந்தனர்.

இந்த ஏலத்தில் மயிலாடுதுறை, தஞ்சாவூர், கடலூர், நாகப்பட்டினம், திருவாருர், தேனி, சத்தியமங்கலம், ஆத்தூர், விருதுநகர் ஆகிய 8 மாவட்டங்களைச் சேர்ந்த 15 வியாபாரிகள் கலந்துகொண்டு ஏலம் எடுத்தனர். இந்த ஏலத்தில் பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்சமாக 7,789 ரூபாய்க்கும், சராசரியாக 6,512 ரூபாய்க்கும் வியாபாரிகள் கொள்முதல் செய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

More News

சார் பதிவாளர்கள் இனி உயர்ந்த மேடையில் அமரக்கூடாது – வணிகவரித்துறை!

admin See author's posts

அகத்திய முனி வரலாறு மற்றும் வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்!

admin See author's posts

நடிகர் சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு மயிலாடுதுறையில் மதிய உணவு வழங்கப்பட்டது!

admin See author's posts

மயிலாடுதுறையில் ரிங் ரோடு பணி விரைவில் துவங்கும்!

admin See author's posts

மயிலாடுதுறையில் குழந்தைகளை பாதுகாப்பதற்கான நியூமோகோக்கல் கான்ஜீகேட் தடுப்பூசி வழங்கும் விழா!

admin See author's posts

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள் அறிவிப்பு!

admin See author's posts

12ம் வகுப்பில் கூடுதல் மதிப்பெண் பெற விருப்பத் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கியது..!!

admin See author's posts

பயனாளர்களின் தகவல்களை பகிர மாட்டோம்.. இறங்கிவந்த வாட்ஸ்அப் நிறுவனம் !!

admin See author's posts

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்கள்!

admin See author's posts

விவசாயிகளுக்கு உழவு இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி!

admin See author's posts

You cannot copy content of this page