3rd December 2021

கொரோனா தடுப்பு ஊரடங்கு: மயிலாடுதுறை புதிய பாதை அமைப்பின் மனித நேயமிக்க செயல்

கொரோனா நோய் பரவாமல் இருக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது நம் அரசு. இதனால் பெரும்பாலும் மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே வாங்கிவிட்டனர். தற்பொழுது நோயின் தாக்கம் கூடிக்கொண்டே போவதால் மக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே உள்ளனர். இதனால் மக்கள் நடமாட்டம் ஏதும் சாலைகளில் இல்லை. அதனால் சாலையோரங்களில் வசிக்கும் மற்றும் ஆதரவற்று அங்காங்கே வசிக்கும் முதியோர் உணவுக்கு சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதனை உணர்ந்து மயிலாடுதுறை புதிய பாதை அமைப்பினர் தங்களால் முயன்றதை சமைத்து அவர்களுக்கு பாதுகாப்பான முறையில் கொடுத்து வருகின்றனர். அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ரஞ்சித் மற்றும் வெங்கட் அவர்களுக்கு மயிலைகுருவின் பாராட்டுகள்.

Leave a Reply

You cannot copy content of this page