25th January 2022

புதுக்கோட்டை அருகே தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே சிஐஎஸ்எப் மற்றும் போலீஸார் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டபோது தலையில் குண்டு பாய்ந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் நேற்று உயிரிழந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே பசுமலைப்பட்டியில் தமிழக காவல் துறையின் துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் உள்ளது. இங்கு கடந்த டிச.30-ம் தேதி மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரும்(சிஐஎஸ்எப்), தமிழக போலீஸாரும் தனித்தனியே துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது, இங்கிருந்து துப்பாக்கியால் சுட்டதில், சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில், பாட்டி வீட்டுக்கு வந்திருந்த கொத்தமங்கலப்பட்டி கூலித் தொழிலாளி கலைச்செல்வன் மகன் புகழேந்தியின்(11) தலையில் குண்டு பாய்ந்தது. ஆபத்தான நிலையில் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புகழேந்திக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தலையில் இருந்த குண்டு அகற்றப்பட்டது. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் மற்றும் போலீஸார் மீது கீரனூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவின்பேரில் இலுப்பூர் கோட்டாட்சியர் எம்.எஸ்.தண்டாயுதபாணி விசாரித்து வருகிறார். அதன்படி, இலுப்பூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் மற்றும் தமிழக போலீஸார் இரு தினங்களுக்கு முன்பு ஆஜராகி விளக்கம்அளித்தனர்.

நேற்று பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோரிடம் கோட்டாட்சியர் விசாரித்தார். துப்பாக்கி சுடும் தளத்துக்கு வருவாய்த் துறை அலுவலர்களுடன் சென்று விசாரணையில் ஈடுபட்டார். துப்பாக்கி சுடும் தளத்துக்கும், சிறுவன் இருந்த இடத்துக்கும் இடையே உள்ள தொலைவு அளந்து கணக்கிடப்பட்டது. அப்போது, விசாரணை அறிக்கையை ஓரிரு நாட்களில் ஆட்சியரிடம் சமர்ப்பிக்க உள்ளதாக கோட்டாட்சியர் தெரிவித்தார்.

இந்நிலையில், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி புகழேந்தி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நார்த்தாமலையிலும், சிறுவனின் சொந்த ஊரான கொத்தமங்கலப்பட்டியிலும் நேற்றிரவு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி புகழேந்தி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நார்த்தாமலையிலும், சிறுவனின் சொந்த ஊரான கொத்தமங்கலப்பட்டியிலும் நேற்றிரவு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

More News

நடிகர் விஜய் குறித்து தனி நீதிபதி கூறிய எதிர்மறை கருத்துக்கள் நீக்கம்: சென்னை ஐகோர்ட்!!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா, தாளடி அறுவடை பணிகள் தீவிரம்-நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்க விவசாயிகள் கோரிக்கை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு சாரங்கபாணி நினைவுத் தூணிற்கு நினைவஞ்சலி!

admin See author's posts

பிப்.,10 ம் தேதி அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதம்!!

admin See author's posts

மயிலாடுதுறையில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்!!

admin See author's posts

மயிலாடுதுறை சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் அதிமுக அஞ்சலி!!

admin See author's posts

நாகையில் 50 கிராமங்களில் நிலத்தடி நீர் உவர் நீராக மாறியதாக புகார்: ஓ.என்.ஜி.சி.யின் மாசு நீர் சுத்திகரிப்பு நிலையம் முற்றுகை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் வீட்டு மனைப்பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் குடியேற வந்த பெண்!

admin See author's posts

மொழிப்போர் தியாகிகள் நாள் இன்று!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்!!

admin See author's posts

You cannot copy content of this page