கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென்று எம்.எல்.ஏ ராஜகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மயிலாடுதுறையில் தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் காஞ்சி சங்கர வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பள்ளியின் தாளாளர் வெங்கடராமன் தலைமை வகித்தார். செயலாளர் தியாகராஜன் முன்னிலை வகித்தார். எம்.எல்.ஏ ராஜகுமார் கலந்துகொண்டு சிறப்பு முகாமை பார்வையிட்டார்.

பள்ளி ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் ரமணி, முதல்வர் மாலதி உட்பட பலர் கலந்துகொண்டனர். நேற்று மட்டும் இந்த முகாமில் 170 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது. பின்னர் எம்.எல்.ஏ ராஜகுமார் நிருபர்களிடம் கூறியத்தவது:

கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மயிலாடுதுறை ஒன்றியத்தில் உள்ள 54 ஊராட்சிகளில் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் நடந்து வருகின்றன.

வீடுகளுக்கு மருத்துவக் குழுவினர் வரும்போது பொது மக்கள் தங்களுக்கு உள்ள பிரச்சனைகளை மறைக்காமல் தெரிவிக்க வேண்டும். தங்கள் பகுதியில் வசிப்பவர்களுக்கு அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக மருத்துவக் குழுவினரிடம் தெரிவிக்கும் வகையில் டாக்டர், செவிலியர்கள், ஊராட்சி தலைவர், அங்கன்வாடி பணியாளர்கள் கொண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனைகளில் சேர்ந்து சிகிச்சை பெற வேண்டும். வீடுகளில் தனிமை படுத்திக் கொண்டவர்கள், டாக்டர்கள் ஆலோசனைப்படி வீடுகளை விட்டு வெளிய வராமல் இருக்க வேண்டும். அவர்களுக்கான அடிப்படை பொருட்கள் வழங்குவதை மருத்துவக் குழுவினர் உறுதி செய்வார்கள். கொரோனா 2வது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதால், அதனை கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கூறினார். அப்போது வட்டார மருத்துவ அலுவலர் சரத்சந்திரன் மற்றும் மருத்துவக்குழுவினர் உடனிருந்தனர்.

More News

11 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் தமிழ்நாடு அரசு உத்தரவு

admin See author's posts

சிறுவனின் சிறுநீரக சிகிச்சைக்கு 25 ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கிய அன்பு அறக்கட்டளை.

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்

admin See author's posts

மயிலாடுதுறையில் உலகயோகா தினம்

admin See author's posts

மயிலாடுதுறை 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க இணையவழி கலந்தாய்வு கூட்டம்

admin See author's posts

அரசு மருத்துவமனைக்கு “குரு-94 “அமைப்பு சார்பில் ஆக்சிஜன் கருவிகள்

admin See author's posts

செம்பனார்கோயில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம்

admin See author's posts

செம்பனார்கோவிலில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் 1000 பேர் பங்கேற்று பயனடைந்தனர்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசணை கூட்டம்

admin See author's posts

தமிழ்நாட்டில் தொற்றின் பாதிப்பை பொறுத்து மாவட்டங்களை 3 வகையாக பிரித்து தளர்வுகள் அறிவிப்பு..!! முழு விவரம்..!!

admin See author's posts

You cannot copy content of this page