30th November 2021

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ரெட்அலர்ட்: ஆட்சியர் லலிதா பேட்டி!

மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் லலிதா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது

மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 51 சதவீதம் தற்போது வரை அதிக அளவு மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் உள்ள 2 ஏரிகள் முழுகொள்ளவு எட்டியுள்ளது. மாவட்டத்தில் 905 குளங்கள் 50 சதவீதம் வரையும் 300 குளங்கள் 75 சதவீதம் அளவிற்கு நிரம்பியுள்ளன. தொடர்ந்து மழை பெய்து வருவதால் அனைத்து நீர்நிலைகளும் விரைவில் நிரம்பும். 9,10,11ம் தேதி மிகஅதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 10ம்தேதி ரெட்அலர்ட்எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் ஒருவாரத்திற்கான பொருட்களை இருப்பில் வைக்கவேண்டும். தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், மழை பெய்யும் போது ஆறுகளில் உடைப்புகள் ஏற்படாமல் தடுக்கவும் கரைகளை பலப்படுத்தவும் 3 லட்சம் காலி சாக்குகள் தயார் நிலையில் உள்ளது.

இதற்கு தேவையான மணல் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளது, புயல் பாதுகாப்பு மையங்கள் தவிர்த்து 350 பள்ளிக்கூடங்கள் தற்காலிக தங்கும் இடங்களாக மாற்றுவதற்கு உண்டான குடிநீர் மின்சாரம் சுகாதாரம் 450 டன் அரிசி உள்ளிட்ட வசதிகளுடன் தயார் செய்யப்பட்டுள்ளன, மாவட்டத்தில் 13 பிர்கா மற்றும் இரண்டு நகராட்சி பகுதிகளில் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு தாசில்தார் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும். கண்ட்ரோல் ரூம் திறக்கப்பட்டுள்ளது. 1077 மற்றும் 04364 222588 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். அதிகாரிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணியிடங்களில் மூன்று நாட்கள் தொடர்ந்து பணியில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது, 68 ஆயிரம் எக்டேரில் சம்பா பயிர் செய்யப்பட்டுள்ள நிலையில் சுமார் 300 எக்டேர் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. மரங்கள் விழுந்தால் அகற்றுவதற்கு உரிய உபகரணங்களும் சுமார் 150 ஜே.சி.பி. இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன என்று தெரிவித்தார்.

மேலும் தற்போது வரை 8 மாடுகள் உட்பட 24 கால் நடைகள் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் , 54 வீடுகள் முழுமையாக மற்றும் பகுதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் கூறினார்.

More News

மயிலாடுதுறை: நவீன குடும்ப நல சிகிச்சை குறித்த விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் தொடக்கம்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் எலி ஒழிப்பு முகாம் நடத்த விவசாயிகள் கோரிக்கை!

admin See author's posts

மயிலாடுதுறை: அளக்குடி ஊராட்சியில் நிரந்தர தடுப்பு ஏற்படுத்த நடவடிக்கை!

admin See author's posts

மயிலாடுதுறை: குத்தாலம் அருகே இடப்பிரச்சினையில் லாரி டிரைவர் அடித்துக்கொலை!

admin See author's posts

மயிலாடுதுறை: பொறையார் ரோட்டரி சங்கம், தரங்கை பொது தொழிலாளர் சங்கம் மற்றும் முகநூல் நண்பர்கள் சார்பில் பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி!

admin See author's posts

பிரீபெய்டு சேவை கட்டணத்தை 20% வரை உயர்த்துகிறது ஜியோ

admin See author's posts

நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் பெண் தராமல் ஏமாற்றியதாக போலீசில் புகார்!

admin See author's posts

மயிலாடுதுறையில் இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி!

admin See author's posts

‘ஜெய் பீம்’ படத்துக்காக சூர்யாவை நேரில் சந்தித்து பாராட்டிய நல்லகண்ணு” !

admin See author's posts

மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை; மரங்கள் சாய்ந்தன!

admin See author's posts

You cannot copy content of this page