19th January 2022

இலங்கை தமிழருக்கான அகதிகள் முகாம், மறுவாழ்வு முகாமென பெயர் மாற்றம் – முதல்வர் அறிவிப்பு.!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 13 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 2021 – 2022 பட்ஜெட் தாக்கலுடன் தொடங்கி, வேளாண்துறைக்கென தனியொரு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது, பட்ஜெட் மீதான மானியங்கள் குறித்த விவாதங்கள் நடைபெற்று வருகிறது. அவ்வப்போது மக்களுக்கான பல்வேறு அறிவிப்புகளும், தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

இன்று காலை மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதிமுக மற்றும் பாஜக கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது. தொடர்ந்து, குரல் வாக்கெடுப்பு மூலமாக வேளாண்சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழருக்கான அகதிகள் முகாம்கள் இனி மறுவாழ்வு முகாம்கள் என அழைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இலங்கை தமிழருக்கான முகாம்களை அகதிகள் முகாம் என அழைக்காமல், மறுவாழ்வு முகாம்கள் என நாம் அழைப்போம் என்றும் தமிழக முதல்வர் தெரிவித்தார்.

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.

More News

மயிலாடுதுறை:திருவிழந்துர் மகா காளியம்மன் கோவிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு!!

admin See author's posts

குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்தி இடம்பெறுவதை உறுதி செய்க: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் தமிழக ஆளுநருக்கு ராஜகுமார் எம்.எல்.ஏ. மனு!

admin See author's posts

மயிலாடுதுறை :நண்பரின் வீட்டில் தீ வைத்தவர் கைது !!

admin See author's posts

மயிலாடுதுறை: திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரங்கநாதர் திருக்கோயிலில் புத்தாடைகள் மற்றும் சீருடைகள் வழங்கும் விழா – நிவேதா எம்.முருகன்!

admin See author's posts

கோமல் ஊராட்சி 100 நாள் வேலை திட்டத்தில் தூய்மையாகும் பாசன வாய்க்கால்

admin See author's posts

மயிலாடுதுறை: திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை எழுந்தருளும் நிகழ்ச்சி பெருமாள், தாயார், ஆண்டாள் ஏக சிம்மாசனத்தில் அருள்பாலிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை: குத்தாலம் அருகே ஜப்பானிய முறையில் குறுங்காடு வளர்க்கும் என்ஜினீயரிங் பட்டதாரி!

admin See author's posts

மயிலாடுதுறையில் 5 ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்!

admin See author's posts

சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்று பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சொந்த செலவில் சரிசெய்த கொள்ளிடம் போலீசார்!

admin See author's posts

You cannot copy content of this page