குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்தி இடம்பெறுவதை உறுதி செய்க: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்தி இடம்பெறுவதை உறுதி செய்யவேண்டும் என்று வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

புதுடெல்லியில் குடியரசு தினவிழா வரும் 26-ம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. இதில் பல்வேறு மாநிலங்களின் சிறப்புகளை பிரதிபலிக்கும் வகையிலான அலங்கார ஊர்திகள் இடம்பெற்று காண்போரை கவர்ந்திழுக்கும். அதற்காக மத்திய அரசு முன்கூட்டியே மாநிலங்கள் அனுப்பும் மாடல்களை பரிசீலனை செய்து விழாவில் இடம்பெறும் ஊர்திகளை தேர்வு செய்யும்.

இந்த ஆண்டு தமிழக அரசும் மாநிலத்தின் சார்பாக இடம்பெற வேண்டிய ஊர்திகளின் மாடல்களை அனுப்பியிருந்தது. ஆனால், இம்முறை தமிழக அரசு அனுப்பிவைத்த மாடல்களையெல்லாம் மத்திய அரசு நிராககரித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டின் முக்கிய விழாவான குடியரசு தினவிழா அணிவகுப்பில் தமிழகத்தை பிரதிபலிக்கும் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்களிப்பு இருட்டடிப்பு செய்யப்படுவதாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ள பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், “குடியரசு தின அணிவகுப்பில் தமிழகத்திலிருந்து நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வ.உ.சி., மகாகவி பாரதியார், ராணி வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் ஆகிய விடுதலைப் போராட்ட வீரர்களின் உருவங்கள் அடங்கிய ஊர்தி இடம்பெறுவது மறுக்கப்பட்டு இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. பிரதமர் இதில் உடனே தலையிட்டு விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழகத்தின் பங்களிப்பு இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

More News

மயிலாடுதுறையில் வண்ணான் குளத்தை சுற்றி நடைபயிற்சி மேடை, பூங்கா அமைக்கும் பணி!

admin See author's posts

`கூடிய விரைவில் தமிழ்நாட்டை கருணாநிதி நாடு என பெயர் மாற்றுவார்கள்’- ஜெயக்குமார் காட்டம்

admin See author's posts

ஜெர்மனி சென்றடைந்தார் பிரதமர் மோடி: சிவப்பு கம்பள வரவேற்பு!

admin See author's posts

பிரசாந்த் கிஷோர் அரசியல் கட்சி தொடங்க திட்டம்?.. மக்களிடம் நேரடியாக செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என ட்வீட்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஏ.ஐ.டி.யூ.சி.- விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மே தின ஊர்வலம்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் மே தின கிராம சபை கூட்டம் நடந்தது!

admin See author's posts

விவசாயிகள் கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து 15 நாளில் தீர்வு காண வேண்டும்-மயிலாடுதுறை குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்!

admin See author's posts

எலட்ரிக் ஸ்கூட்டரில் தீ விபத்து: உயிர் தப்பிய தந்தை, மகன்!

admin See author's posts

நாகை அருகே தேர் சக்கரத்தில் சிக்கி பலியான இளைஞருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்

admin See author's posts

மே 1ல் மக்களாட்சி மணம் வீசட்டும் – முதலமைச்சர் வாழ்த்து

admin See author's posts

You cannot copy content of this page