26th October 2021

மாதம் ரூ.5,000 ஊக்கத் தொகை திட்டம் – முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்..!

தமிழக சட்டப்பேரவையில் கடந்த மாதம் 4ம் தேதி நடந்த இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்களைத் தொடர்ந்து, அமைச்சர் பி.கே.சேகர்பாபு, துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது, “தமிழகத்தில் உள்ள கோயில்களில் பக்தர்களுக்கு மொட்டை போடுவதற்கு இனி கட்டணம் இல்லை; அந்த பணியில் ஈடுபட்டுள்ள 1,749 ஊழியர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு, அவர்களுக்கு மாதந்தோறும் 5,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்” என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

இந்நிலையில், கோயில்களில் மொட்டை போடும் ஊழியர்களுக்கு மாதம் 5,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். இந்தத் திட்டத்தை தொடங்குவதற்கு அடையாளமாக, 250 பேருக்கு மாத ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

இதுகுறித்து அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மொட்டை போடும் ஊழியர்களுக்கு மாத ஊக்கத்தொகை வழங்கும் திட்ட விழாவில் கலந்து கொள்ள 250 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கோயில் பணியாளர்களுக்கு வழங்கப்பட உள்ள ஊக்கத்தொகை அந்தந்த கோயில் நிர்வாகம் சார்பில் எடுத்து வந்து பொறுப்பாளரிடம் ரொக்கமாக வழங்க வேண்டும்.

பயனாளிகள் ஆதார் அட்டையுடன் வர வேண்டும். இதற்காக பொறுப்பு அலுவலர் இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி, உதவி ஆணையர் ஜோதிலட்சுமி, செயல் அலுவலர்கள் சீதாராமன் ஜெயராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News

கொள்ளிடம் அருகே பண்ணையில் தீ விபத்து; 500 கோழிகள் கருகி சாவு!

admin See author's posts

செம்பனார்கோவில்: கேட்டரிங் சர்வீஸ் அலுவலகத்தில் பிணமாக கிடந்த ஊழியர்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுநூலக கட்டிடம், பள்ளி கட்டிடம், பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்!

admin See author's posts

சித்தர்காடு அருகே, கிணற்றில் விழுந்த காளையை மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு பாராட்டு!

admin See author's posts

திருவாரூர்: கனமழையால் இடிந்து விழுந்த தியாகராஜர் கோயில் கமலாலயம் குளத்தின் சுற்றுச் சுவர்!

admin See author's posts

சீர்காழி அருகே ஏரி மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் ஆகாய தாமரையால் மூடிய அவலம்!

admin See author's posts

மயிலாடுதுறை சின்னமேடு மீனவ கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்க கல் சுவர் எழுப்புவதற்கு பூமி பூஜை போடப்பட்டது!

admin See author's posts

தமிழக அரசின் பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை காவிரியில் எழுந்தருளிய பரிமள ரெங்கநாதர்!

admin See author's posts

மயிலாடுதுறை: பள்ளிகள் திறப்பை முன்னிட்டு வாகனங்கள் ஆய்வு-மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா!

admin See author's posts

You cannot copy content of this page