19th January 2022

சசிகலா தனிக்கட்சி தொடங்கலாம், அ.தி.மு.க என்ற போர்வையில் சுற்றுப்பயணம் வரக்கூடாது – முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி என அறியப்படும் சசிகலா அதிமுகவினருடன் பேசும் ஆடியோக்கள் சமீபகாலமாக வெளியாகி வருகிறது. அதிமுக எம்.எல்.ஏ கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் போட்ட பின்னர் இந்த ஆடியோ விவகாரம் ஓய்ந்ததாக இல்லை. இது அதிமுக தலைவர்களுக்கு பெரும் தலைவலியாக உள்ளது. இந்நிலையில் விளாத்திகுளத்தில் நேற்று நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் சசிகலாவுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த விவகாரம் தொடர்பாக கோவில்பட்டியில் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு அளித்த பேட்டியில், ‘அதிமுகவில் பொறுப்பில் உள்ளவர்கள், தொண்டர்களிடம் சசிகலா பேசுவதில்லை, அதிமுகவில் இருந்து ஒதுங்கி இருப்பவர்களிடம் பேசி வருகிறார். விளாத்திகுளத்தில் நேற்று நடைபெற்றதாக கூறப்படும் அதிமுக கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் யாரும் இல்லை.

தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாட்டுக்கு திமுகதான் காரணம் – தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் குற்றஞ்சாட்டு சசிகலாவிற்கு என்ன நிர்ப்பந்தம் என்று தெரியவில்லை. அதிமுகவில் அவரை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று ஒட்டுமொத்தமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன் பின்னரும் அந்த முயற்சி எடுப்பது சசிகலாவிற்கு அழகல்ல. எந்த அர்த்தத்தில் பண்ணுகிறார், அவருக்கு என்ன நிர்பந்தம் என்று தெரியவில்லை . இதற்கு சசிகலா தான் பதில் சொல்ல வேண்டும் . சசிகலா ஒரு கட்சியை தொடங்கி சுற்றுப்பயணம் வந்தால் அதை யாரும் தடுக்க முடியாது. அதிமுக என்ற போர்வையில் வரக்கூடாது என்பது தான் எங்களுடைய கருத்து. டிடிவி தினகரன் அமமுக என்ற கட்சி ஆரம்பிச்சு தேர்தலில் போட்டியிட்டார். அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.அமமுக தனிக்கட்சி ஆரம்பித்து விட்டார்கள். அவர்கள் தனிக் கொள்கை வகுத்துக் கொள்ளலாம், திமுக அல்லது யார் கூட வேணாலும் கூட்டணி வைத்துக் கொள்ளலாம்.‌ அது அவர்களின் உரிமை. அதைப்பற்றி நாங்கள் கருத்து கூறவோ, விமர்சனமும் செய்யவோ முடியாத

சசிகலா ‌அமமுகவிற்கு தலைமையேற்று வழி நடத்தலாம். அதில் எங்களுக்கு ஆட்சேபனை ஆனால் டிடிவி தினகரன் ஒத்துக்கொள்ளவேண்டும். அமமுக கட்சியின் பொதுச் செயலாளராக தினகரன் இருக்கிறார். அவர் ஒப்புதல் இருந்தால் தான் அங்கும் செயல்பட முடியும். அதிமுகவில் சேர்ப்பதற்கு ஒருங்கிணைப்பாளர். இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் வேண்டும்.அதிமுக பொதுச்செயலாளருக்கு இருந்த அதிகாரம் ஒருங்கிணைப்பாளர். இணை ஒருங்கிணைப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ளது. என்னை கட்சியில் இருந்து நீக்கம் செய்கின்ற அதிகாரம் கூட அவர்களிடம் உள்ளது . கட்சியில் சேர்க்க மறுத்த பின்னர் நான் அந்தக் கட்சிக்கு செல்வேன்,‌ கட்சி நடத்துவேன் என்று சொல்வது விளையாட்டுத்தனமாகவும், வேடிக்கையாக உள்ளது.திமுக எங்களுக்கு எதிர் கட்சி, சசிகலா பற்றி நாங்களும் கணக்கில் கூட எடுத்துக் கொள்ளவில்லை. சசிகலா சுற்றுப்பயணத்தின்போது அதிமுகவினர் யாரும் செல்லப் போவதில்லை. ஆகையால் சசிகலா சுற்றுப்பயணத்தினால் அதிமுகவிற்கு எவ்வித பாதிப்பும் இல்லை. உள்ளாட்சி அமைப்புகள் பதவியில் இருப்பவர்கள் ஆட்சி மாறும்போது கட்சி மாறுவது வழக்கம்தான் அவர்கள் கொள்கையற்றவர்கள். அதிமுக கட்சி வீறுகொண்டு எழுந்து அடுத்து வரும் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெறும். மீண்டும் ஆட்சி அமைக்கும். தி.மு.க – சசிகலா இணைந்து செயல்படுகின்றனரா என்ற கேள்விக்கு

அதுபோன்று எது இருந்தாலும் வெளிச்சத்திற்கு வந்துவிடும். . அதிமுக வெற்றி பெற வேண்டும் என்று சசிகலா நினைத்திருந்தால் அமமுக போட்டியிடுவதை தடுத்திருக்கலாம் . அமமமுக போட்டியிட்ட இடங்களில் உள்ள கோவிலுக்கு சசிகலா வர வேண்டிய அவசியம் என்ன. அதற்கு என்ன அர்த்தம் என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும் ஆகையால்தான் சசிகலா வேண்டாம் என்ற முடிவிற்கு தலைமை கழகம் வந்துள்ளது‌ என்றார்.

More News

மயிலாடுதுறை:திருவிழந்துர் மகா காளியம்மன் கோவிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு!!

admin See author's posts

குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்தி இடம்பெறுவதை உறுதி செய்க: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் தமிழக ஆளுநருக்கு ராஜகுமார் எம்.எல்.ஏ. மனு!

admin See author's posts

மயிலாடுதுறை :நண்பரின் வீட்டில் தீ வைத்தவர் கைது !!

admin See author's posts

மயிலாடுதுறை: திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரங்கநாதர் திருக்கோயிலில் புத்தாடைகள் மற்றும் சீருடைகள் வழங்கும் விழா – நிவேதா எம்.முருகன்!

admin See author's posts

கோமல் ஊராட்சி 100 நாள் வேலை திட்டத்தில் தூய்மையாகும் பாசன வாய்க்கால்

admin See author's posts

மயிலாடுதுறை: திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை எழுந்தருளும் நிகழ்ச்சி பெருமாள், தாயார், ஆண்டாள் ஏக சிம்மாசனத்தில் அருள்பாலிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை: குத்தாலம் அருகே ஜப்பானிய முறையில் குறுங்காடு வளர்க்கும் என்ஜினீயரிங் பட்டதாரி!

admin See author's posts

மயிலாடுதுறையில் 5 ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்!

admin See author's posts

சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்று பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சொந்த செலவில் சரிசெய்த கொள்ளிடம் போலீசார்!

admin See author's posts

You cannot copy content of this page