30th November 2021

சட்டம் -ஒழுங்கு பிரச்னை 24 மணி நேரமும் தொடர்ப்பு கொள்ளலாம்

நாகை எஸ்.பி .தகவல்

சட்டம்-ஒழுங்கு பிரச்சனைக்குத் தீர்வு காண பொதுமக்கள் 24 மணிநேரமும் தொடர்ப்பு கொள்ளலாம் என நாகை மாவட்டக் காவல் கண் காணிப்பளார் செ.செல்வநாகரத்தினம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு :

நாகை மாவட்டத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளுக்குத் தீர்வு காண பொது மக்கள் 24 மணி நேரமும் 9498111498 என்ற செல்லிடப்பேசி எண்னில் தொடர்ப்பு கொள்ளலாம். இதேபோல், வார நாள்களில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மாவட்டக் காவல் அலுவலகத்தில், பொதுமக்கள் நேரடியாக வந்து தங்களின் பிரச்னைகளைத் தெரிவித்து தீர்வு பெறலாம் என அவர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You cannot copy content of this page