25th September 2021

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு.. அறிவித்தார் அமைச்சர் அன்பில் மகேஷ்..!

“தமிழகத்தில், குறிப்பிட்ட வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க தயார் நிலையில் உள்ளோம்; முதற்கட்டமாக. ஒரு வகுப்பிற்கு 20 மாணவர்களை சுழற்சி முறையில் வரவழைத்து பாடம் நடத்த ஏற்பாடு செய்துவருகிறோம்” என, அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பள்ளிகள் திறப்பு குறித்து பேசிய அவர், “கொரோனா தொற்று குறைந்துள்ளதை அடுத்து, பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு கட்டங்களாக பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், தமிழகத்தில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பள்ளிகளுக்கு சுழற்சி முறையில் மாணவர்களை வரவழைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஒரு வகுப்பிற்கு 20 மாணவர்கள் என்ற அடிப்படையில் திட்டமிடப்பட்டு பள்ளிகளைத் திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்த அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார்” என்றார்.

Advertisement

More News

மயிலாடுதுறை: விளநகர்பகுதியில் மின்விளக்குகள் இல்லை என கிராமவாசிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார்!

admin See author's posts

கோயில்களில் பயன்படாமல் உள்ள நகைகளை உருக்கி தங்க பிஸ்கேட்டுகளாக்கும் நடவடிக்கையில் அரசு நேர்மையாக செயல்படும் – அமைச்சர் சேகர் பாபு!

admin See author's posts

தமிழகத்தில் நாளை 15 லட்சம் தடுப்பூசி போட இலக்கு!

admin See author's posts

மயிலாடுதுறை: நாட்டு நலப்பணித்திட்ட நாளை முன்னிட்டு தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார் எம்.எல்.ஏ ராஜகுமார்!

admin See author's posts

தரங்கம்பாடி: ஆக்கூரில் லயன்ஸ் சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா!

admin See author's posts

மயிலாடுதுறை கச்சேரி சாலையில் பெண் தவறவிட்ட 31 சவரன் தங்க நகைகள் ஒருமணி நேரத்தில் மீட்பு!

admin See author's posts

20 ஆண்டுகளாகத் தேர்ச்சி பெறாமல் இருப்பவர்களுக்கு இறுதி வாய்ப்பு..!

admin See author's posts

கடலூர் ஆணவக் கொலை வழக்கு: ஒருவருக்கு தூக்கு, 13 பேருக்கு ஆயுள்!

admin See author's posts

13 லட்சம் மதிப்பிலான 7635 மதுபாட்டில்கள் ரோடு ரோலர் மூலம் ஏற்றி அழிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை: அரசு பெரியார் மருத்துவமனையில் நேற்று அதிநவீன சிடி ஸ்கேன் கருவியை எம்.எல்.ஏ.ராஜகுமார் திறந்து வைத்தார்!

admin See author's posts

You cannot copy content of this page