3rd December 2021

சீர்காழியில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட வெள்ளி சுவாமி சிலைகள் பறிமுதல்

சீர்காழி அருகே கொள்ளிடம் சோதனை சாவடியில் தோதல் நடத்தும் அலுவலா்கள், பறக்கும் படையினா் புதன்கிழமை நடத்திய வாகனச் சோதனையில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 7.92 லட்சம் மதிப்புள்ள வெள்ளி சுவாமி சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோதல் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து தோதல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அதனடிப்படையில், பறக்கும் படைக் குழு சிறப்பு வட்டாட்சியர் முருகேசன், எஸ்எஸ்ஐ இளங்கோவன் ஆகியோர் கொண்ட தேர்தல் நிலையான சோதனை குழுவினர் சீர்காழி அருகே கொள்ளிடம் சோதனை சாவடியில் புதன்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, சிதம்பரத்தில் இருந்து சீர்காழி நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். உரிய ஆவணங்களின்றி அட்டைப் பெட்டிகளில் ரூ.7.92 லட்சம் மதிப்புள்ள வெள்ளி விநாயகர், முருகர் ,நடராஜர், கோமாதா ஆகிய சுவாமி சிலைகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் வெள்ளி சுவாமி சிலைகளை தேர்தல் நிலையான கண்காணிப்பு சோதனை குழுவினர் பறிமுதல் செய்து சீர்காழி கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட சுவாமி சிலைகளை சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் நாராயணன், வட்டாட்சியர் ஹரிதரன் ஆகியோர், தேர்தல் துணை வட்டாட்சியர் செந்தில்குமார் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது சுவாமி சிலைகளை வாகனத்தில் எடுத்து வந்த கோவையைச் சேர்ந்த திருப்பதி மகன் முருகேசன் ( 44) என்பவரிடம், உரிய ஆவணங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சமர்ப்பித்து சிலைகளை பெற்றுச் செல்லுமாறு அறிவுறுத்தினர்.

More News

மயிலாடுதுறை அருகே 10 ஆண்டுகளாக தூர்வாரப்படாத வடிவாய்க்காலால் விவசாயிகளின் 500 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியது!

admin See author's posts

மயிலாடுதுறை:பேருந்தின் படியில் தொங்கி மாணவர்கள் பயணம் .. கோபத்தில் நடுச்சாலையில் பேருந்தை நிறுத்திய ஓட்டுநர்!

admin See author's posts

விவசாயிகளின் காப்பீடு தொகையை மோசடி செய்த வி.ஏ.ஓ. பணியிடை நீக்கம்!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார் – நிவேதா எம்.முருகன்!

admin See author's posts

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்பு !

admin See author's posts

டில்லியில் பெட்ரோல் விலை ரூ.8 குறைப்பு!

admin See author's posts

கலைஞரை போல ஸ்டாலினும் இதனை செய்ய வேண்டும்.. முதல்வர் ஸ்டாலினுக்கு ராமதாஸ் முக்கிய கோரிக்கை!

admin See author's posts

மயிலாடுதுறை: விவசாயிகளின் காப்பீடு தொகை மோசடி செய்ததாக வி.ஏ.ஓ. மீது புகார்!

admin See author's posts

அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம்

admin See author's posts

வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.101 உயர்வு

admin See author's posts

You cannot copy content of this page