21st September 2021

திட்டமிட்டபடி தேர்வு; டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு !

திட்டமிட்டபடி தேர்வு; டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு !

 ‘உதவி வேளாண்மை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர் போன்ற பதவிகளுக்கு, ஏற்கனவே திட்டமிட்டபடி, எழுத்துத் தேர்வு நடக்கும்’ என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் வெளியிட்ட, செய்திக்குறிப்பு: அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்தபடி, உதவி வேளாண்மை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர், தோட்டக்கலை உதவி இயக்குனர், தோட்டக்கலை அலுவலர், வேளாண்மை அலுவலர் விரிவாக்கம் ஆகிய பதவி களுக்கு, திட்டமிட்ட படி எழுத்துத் தேர்வு நடக்கும். வரும், 17 மற்றும், 18ம் தேதி, காலை மற்றும் மதியம்; 19ம் தேதி காலை மட்டும், ஏழு மாவட்டங்களில், தேர்வு நடக்க உள்ளது.விண்ணப்பதாரர்கள் தேர்வு நுழைவுச்சீட்டை, www.tnpsc.gov.in; www.tnpscexams.in ஆகியவற்றில், தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.தேர்வு நடக்கும் இடத்தை அறிந்து கொள்ள, தேர்வு நுழைவு சீட்டில், ‘கியூஆர் கோடு’ அச்சிடப்பட்டுள்ளது. அதை, ‘ஸ்கேன்’ செய்து, ‘கூகுள் மேப்’ வழியே, தேர்வுக்கூடம் செல்லலாம். தேர்வு அறைக்குள், மொபைல் போன் எடுத்து செல்ல அனுமதி இல்லை. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Source : தினமலர்

More News

சிதம்பரம் அருகே உள்ள வாய்க்காலில் லாரி கவிழ்ந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை நெடுஞ்சாலை துறை கோட்டம் புதிதாக உருவாக்கப்பட்ட அலுவலகம் திறப்பு!

admin See author's posts

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக வன்கொடுமை தடுப்பு சட்டம் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்!

admin See author's posts

மயிலாடுதுறை: பலத்த மழையால் டி.எஸ்.பி.அலுவலகத்தை நீர் சூழ்ந்தது!

admin See author's posts

தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சந்நிதானத்தை சந்தித்து தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆசி பெற்றார்!

admin See author's posts

மயிலாடுதுறையில் மாபெரும் தூய்மைப்பணி முகாம்; மாவட்ட ஆட்சியர் ஆய்வு !

admin See author's posts

வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு, பொறையார், கிடராங்கொண்டான் பகுதிகளில் மின்நிறுத்தம்!

admin See author's posts

தஞ்சாவூரில் 100 ஆண்டுகள் பழமையான மூன்று கட்டிடங்களைக் கையகப்படுத்திய மாநகராட்சி!

admin See author's posts

மயிலாடுதுறை: வடகிழக்கு பருவமழை பேரிடர் காலத்தில் ஆபத்துகளை சமாளிக்க தீயணைப்பு வீரர்கள் நேற்று ஆழ்வார் குளத்தில் பொதுமக்களுக்கு தத்துவ செயல்விளக்கம்!

admin See author's posts

விரைவில் TNPSC தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகிறது!

admin See author's posts

You cannot copy content of this page