19th January 2022

செம்பனார்கோயில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம்

தரங்கம்பாடி, ஜுன்-19;
செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியம் ஒன்றிய குழு உறுப்பினர்கள் சாதாரண கூட்டம் வெள்ளிக்கிழமை சமூக இடைவெளி பின்பற்றி நடைபெற்றது.

கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை வகித்தார். நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா என் முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். ஆக்கூர் வட்டார மருத்துவ அலுவலர் கார்த்திக் சந்திரகுமார், செம்பை வட்டார வளர்ச்சி அலுவலர் திருமலைக்கண்ணன், செம்பை ஒன்றிய குழு துணைத்தலைவர் மைனர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தின் போது ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினருக்கு வாழ்த்து தெரிவித்து பின்னர் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். உறுப்பினர் ரஜினி சேமங்கலம் கிராமத்தில் அங்காடி அமைத்துத்தர வேண்டும் என கோரிக்கை வைத்தார். உறுப்பினர் லெனின்தாஸ் நட்சத்திரமாலை கிராமத்தில் பல ஆண்டுகளாக போடப்படாமல் உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜ்கண்ணன் இந்திராநகர் மடபுரம் வடிகால் வசதி அமைக்க வேண்டும். மாமாக்குடியில் தார்சாலையும், பிடாரிக்குளத்தில் படித்துறை அமைத்து பக்கவாட்டுச்சுவர் அமைக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார். உறுப்பினர்களின் கோரிக்கைகளை படிபடியாக நிறைவேற்றி தருவதாக பொதுவா சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் கூறினார். முன்னதாக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்ற சட்டமன்ற உறுப்பினருக்கு ஒன்றிய பெருந்தலைவர்,துணைத்தலைவர்,உறுப்பினர்கள்,அலுவலர்கள் சார்பில் வாழ்த்து மடல் வழங்கப்பட்டது.

கூட்டத்தில் திமுக ஒன்றிய செயலாளர் அன்பழகன், அப்துல்மாலிக்,மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர் படவிளக்கம் 1, செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றபோது எம்.எல்.ஏ பேசியபோது, 2 வாழ்த்துமடல் அளித்த போது.

More News

மயிலாடுதுறை:திருவிழந்துர் மகா காளியம்மன் கோவிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு!!

admin See author's posts

குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்தி இடம்பெறுவதை உறுதி செய்க: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் தமிழக ஆளுநருக்கு ராஜகுமார் எம்.எல்.ஏ. மனு!

admin See author's posts

மயிலாடுதுறை :நண்பரின் வீட்டில் தீ வைத்தவர் கைது !!

admin See author's posts

மயிலாடுதுறை: திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரங்கநாதர் திருக்கோயிலில் புத்தாடைகள் மற்றும் சீருடைகள் வழங்கும் விழா – நிவேதா எம்.முருகன்!

admin See author's posts

கோமல் ஊராட்சி 100 நாள் வேலை திட்டத்தில் தூய்மையாகும் பாசன வாய்க்கால்

admin See author's posts

மயிலாடுதுறை: திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை எழுந்தருளும் நிகழ்ச்சி பெருமாள், தாயார், ஆண்டாள் ஏக சிம்மாசனத்தில் அருள்பாலிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை: குத்தாலம் அருகே ஜப்பானிய முறையில் குறுங்காடு வளர்க்கும் என்ஜினீயரிங் பட்டதாரி!

admin See author's posts

மயிலாடுதுறையில் 5 ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்!

admin See author's posts

சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்று பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சொந்த செலவில் சரிசெய்த கொள்ளிடம் போலீசார்!

admin See author's posts

You cannot copy content of this page