மயிலாடுதுறையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் திடமேலாண்மை திட்டம் குறித்து கலந்தாய்வு கூட்டம்!

மயிலாடுதுறை நகராட்சி பகுதிக்குட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் திடமேலாண்மை திட்டம் குறித்து வர்த்தக நிறுவனங்களுடன் கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் திருமதி.இரா.லலிதா இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.இராஜகுமார் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
தமிழக முதலமைச்சர் உத்தரவின்பேரில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இன்றைய தினம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் திட மேலாண்மை திட்டம் குறித்து வர்த்தக நிறுவனங்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது.

வர்த்தக நிறுவனங்களை சார்ந்தவர்கள் தங்களது நிறுவனங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தொய்வில்லாமல் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். அந்தவகையில் வர்த்தக நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தால் , கிருமி நாசினி கொண்டு கைகளை கழுவுதல் போன்றவைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். அதேபோன்று தங்களது நிறுவனங்களில் நுகர்வோர்கள் கைகளை சுத்தப்படுத்திக்கொள்ள கிருமி நாசினி வைத்திட வேண்டும். குறிப்பாக நுகர்வோர்களை சமூக இடைவெளியை பின்பற்ற செய்திட வேண்டும். கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்களில் வர்த்தக நிறுவன ஊழியர்கள் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும் வர்த்தக நிறுவனங்கள் குப்பைகளை மக்கும் மற்றும் மக்கா குப்பை என இரண்டாக பிரித்து அவைகளை குப்பைகள் சேகரிக்க வரும் தூய்மை பணியாளர்களிடம் வழங்கிட வேண்டும். திடக்கழிவு மேலாண்மை திட்டமானது நகராட்சி மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே நிறுவனங்கள் குப்பைகளை முறையாக பிரித்து அவற்றை நகராட்சி தூய்மை பணியாளர்களிடம் வழங்கிட வேண்டும்.
குப்பைகள் இல்லா தூய்மையான நகரமாக உருவாக அனைவரும் முழு ஒத்துழைப்பு தந்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் திருமதி.இரா.லலிதா இ.ஆ.ப., தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் மரு.இராஜசேகர், மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் திரு.சுப்பையா உள்ளிட்ட நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

More News

தரங்கம்பாடியில் மயிலாடுதுறை மாவட்ட 20 மீனவ கிராமம் ஆலோசனை கூட்டம்

admin See author's posts

“வெற்றிப்பெற முடியவில்லை, மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” – பவானி தேவி உருக்கம்

admin See author's posts

அமெரிக்கா : மணல் புயலால் அடுத்தடுத்து மோதிக் கொண்ட வாகனங்கள் – விபத்தில் 7 பேர் பலி

admin See author's posts

2.4 லட்சம் மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த ஆண்டு சேர்ந்துள்ளனர்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!

admin See author's posts

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம்; பிரியா மாலிக்கிற்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து!

admin See author's posts

கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா: எடியூரப்பா அறிவிப்பு!

admin See author's posts

மத்திய அரசு பணியில் வேலை வாய்ப்பு! விண்ணப்பிப்பது எப்படி?

Rathika S See author's posts

முதுபெரும் தமிழறிஞர் புலவர் இளங்குமரனாரின் மறைவு தமிழ்மொழிக்கும் தமிழ்நாட்டுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் : மு.க.ஸ்டாலின் இரங்கல்!!

Rathika S See author's posts

பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்… செப்.4-ல் தரவரிசைப் பட்டியல் வெளியிட திட்டம்!

admin See author's posts

முதுபெரும் தமிழ் புலவர் இளங்குமரனார் காலமானார்…!

admin See author's posts

You cannot copy content of this page