வீடுகளுக்குள் வழிந்து ஓடும் புதைசாக்கடை கழிவுநீர், தேர்தலை புறக்கணிக்க மக்கள் முடிவு – தினமணி செய்தி !

வீடுகளுக்குள் வழிந்து ஓடும் புதைசாக்கடை கழிவுநீர், தேர்தலை புறக்கணிக்க மக்கள் முடிவு

மயிலாடுதுறை பெசன்ட் நகரில் புதைசாக்கடை கழிவுநீர் வழிந்து வீடுகளுக்குள் புகுந்ததால் பெரும் அவதிக்குளாகியுள்ள அப்பகுதியினர் நடவடிக்கை எடுக்காத நகராட்சியை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

மயிலாடுதுறை நகராட்சியில் அண்மைக்காலமாக புதைசாக்கடை ஆள்நுழைவுத் தொட்டி வழியே கழிவுநீர் வழிந்தோடி சாலைகளில் தேங்கி நிற்பது வாடிக்கையாகி உள்ளது.இந்த கழிவுநீர் நீர்நிலைகளில் கலப்பதால் நீர்வளமும்,மனவளமும் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தொடர் புகார்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மயிலாடுதுறை பெசன்ட் நகரில் கடந்த சில வாரங்களாக நேரு, தாமரை தெரு,ரோஜா தெரு ஆகிய தெருக்களில் புதைசாக்கடை கழிவுநீர் வழிந்தோடி வீடுகளுக்குள் புகுந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.மேலும்,அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது.

இதன்காரணமாக இப்பகுதியினர் பலர் தங்கள் வீடுகளை பூட்டிவிட்டு அவர்களது உறவினர்கள் வீட்டில் தஞ்சமடைந்துள்ளனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் நகராட்சியிடம் பலமுறை புகார் தெரிவித்ததன்பேரில் ஆணையர் உள்ளிட்ட நகராட்சி அலுவலர்கள் பலமுறை நிகழ்விடத்துக்கு சென்று பார்வையிட்டும்,விரைவில் சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறிசென்றும் இதுவரை இப்பிரச்சனை தீர்க்கப்படாமல் உள்ளது.

இதுகுறித்து,பெசன்ட் நகர் குடியிருபோர் னால வாழ்வு சங்க நிர்வாகி சங்கர் கூறியது:4 – ஆம் எண் கழிவு நீரேற்று நிலையத்தில் ஏற்பட்ட பழுதால் புதைசாக்கடை கழிவுநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டு, ஆள் நுழைவுத் தொட்டிகளின் வழியே வழிந்தோடி வீடுகளுக்குள் புகுந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது.இதனால் எங்கள் பகுதியில் பலருக்கு பல நோய்கள் உருவாகின்றன.

நகராட்சி நிர்வாகத்தினர் பல்வேறு இடங்களில் சேகரிக்கும் கழிவுநீரை,ஆறுபதியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லாமல்,புளியந்தெருவில் உள்ள 4 – ஆம் எண் கழிவு நீரேற்று நிலையம் அருகில் உள்ள வாய்க்காலில் திறந்து விடுகின்றனர்.

அதுமட்டுமின்றி,தனியார் சசெப்டிக் டேங்க் வாகனங்களின் கழிவுகளையும் இரவு நேரங்களில் இந்த வாய்க்காலில் திறந்து விடுகின்றனர்.இதுகுறித்து,பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால்,நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலை பெசன்ட் நகரில் வசிக்கும் மக்கள் அனைவரும் புறக்கணிக்க உள்ளோம் என்றனர்.

Source : Dinamani

More News

புதுச்சேரி முதல்வராக பதவியேற்க உள்ளரங்கசாமிக்கு திடீர் உடல்நலக்குறைவு

admin See author's posts

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி: மருத்துவமனையில் அனுமதி

admin See author's posts

கொரோனாவால் நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்!

admin See author's posts

உடனடியாக கட்டளை மையம் திறக்க வேண்டும் – முக ஸ்டாலின்!

admin See author's posts

லக்னோவில் ஆக்ஸிஜன் ஆலையில் சிலிண்டர் வெடிப்பு.., 2 பேர் உயிரிழப்பு .!

admin See author's posts

தமிழ்நாட்டில் மேலும் புதிய கட்டுப்பாடுகள்..மே.6 முதல் அமல்!

admin See author's posts

மறைந்த ட்ராபிக் ராமசாமி அவர்களுக்கு மயிலாடுதுறையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

admin See author's posts

மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு!

admin See author's posts

இயக்குனர் வசந்தபாலனுக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி!

admin See author's posts

அரசு ஊழியர்கள் 50% பேர் சுழற்சி முறையில் பணிக்கு வர வேண்டும்.: அரசாணை வெளியீடு!

admin See author's posts

You cannot copy content of this page