டாஸ்மாக் கடைகள் குறித்த உச்சநீதிமன்றத்தின் உத்தரவு ஏமாற்றமளிக்கிறது வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு கருத்து

மயிலாடுதுறை மாவட்ட வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் டாக்டர் ராம.சேயோன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 8. 5. 2020ம் தேதியன்று தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க உத்தரவை வழங்கியது.
அந்த உத்தரவை கடைபிடிக்காமல், தமிழக அரசு மக்கள் நலனில் சிறிதும் கருத்தில் கொள்ளாமல், வருமானத்தை மட்டுமே கவனத்தில் கொண்டு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது .
அந்த மேல்முறையீடு வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, உச்சநீதிமன்றத்தால் சென்னை உயர்நீதிமன்றத்தின் டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.
இந்த இடைக்கால தடை ஏமாற்றம் அளிக்கிறது. நீதிமன்றங்கள் நீதியின் கோயில்களாக மக்களை காக்கக்கூடிய தெய்வங்களாக விளங்கி வரும் நிலையில், இந்த தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு வருமானத்தை புறந்தள்ளி, தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டாம் என முடிவு செய்ய வேண்டும் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

More News

தமிழக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொரோனா உறுதி

admin See author's posts

திமுக அமைச்சரவை பட்டியல் வெளியாகி உள்ளது.

admin See author's posts

புதுச்சேரி முதல்வராக பதவியேற்க உள்ளரங்கசாமிக்கு திடீர் உடல்நலக்குறைவு

admin See author's posts

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி: மருத்துவமனையில் அனுமதி

admin See author's posts

கொரோனாவால் நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்!

admin See author's posts

உடனடியாக கட்டளை மையம் திறக்க வேண்டும் – முக ஸ்டாலின்!

admin See author's posts

லக்னோவில் ஆக்ஸிஜன் ஆலையில் சிலிண்டர் வெடிப்பு.., 2 பேர் உயிரிழப்பு .!

admin See author's posts

தமிழ்நாட்டில் மேலும் புதிய கட்டுப்பாடுகள்..மே.6 முதல் அமல்!

admin See author's posts

மறைந்த ட்ராபிக் ராமசாமி அவர்களுக்கு மயிலாடுதுறையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

admin See author's posts

மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு!

admin See author's posts

Leave a Reply

You cannot copy content of this page