சீர்காழி: நான்கு வழி சாலைக்கு நிலம் கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு!

விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம் முதல் புத்தூர் வரை ஒன்பது கிலோ மீட்டர் தூரத்திற்கு 70 ஏக்கர் விவசாய விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. நிலங்களை கையகப்படுத்தும் பணியின்போது நிலத்திற்கான சந்தை மதிப்பு அல்லது அரசின் வழிகாட்டு மதிப்பு இரண்டில் எது அதிகமாக உள்ளதோ அதைவிட மூன்று மடங்கு கூடுதலாக வழங்குவதாக அறிவித்து நில உரிமையாளர்களிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் நிலத்தின் அரசு வழிகாட்டு மதிப்பு 40 ரூபாய் இருக்கும் நிலையில் சதுர அடி ஒன்றுக்கு ரூ 2. 60 முதல் ரூ 4 மட்டுமே அரசு வழங்கியதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனை எதிர்த்து உரிய இழப்பீடு வழங்கக்கோரி விவசாயிகள் மேல்முறையீடு செய்துள்ள நிலையில் இன்று புத்தூர் பகுதியில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியை தனியார் ஒப்பந்த நிறுவனம் துவங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் தங்களது நிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகையை அரசு அறிவித்தபடி வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் உரிய இழப்பீடு தொகை வழங்கும் வரை தங்களது நிலத்தில் எந்த பணியையும் தொடங்கக் கூடாது எனவும் எதிர்ப்பு தெரிவித்து பணியை தடுத்து நிறுத்தினர். தகவலறிந்து வந்த கொள்ளிடம் போலீசார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்படி தங்கள் நிலத்திற்கான இழப்பீட்டு தொகை குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு வழங்கப்பட்டால் மட்டுமே தங்கள் இடத்தில் பணிகளை தொடர வேண்டும் என உறுதியாக தெரிவித்து விவசாயிகள் கலைந்து சென்றனர். இதனால் நான்கு வழிச்சாலைக்கு சாலை அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

More News

மயிலாடுதுறையில் வண்ணான் குளத்தை சுற்றி நடைபயிற்சி மேடை, பூங்கா அமைக்கும் பணி!

admin See author's posts

`கூடிய விரைவில் தமிழ்நாட்டை கருணாநிதி நாடு என பெயர் மாற்றுவார்கள்’- ஜெயக்குமார் காட்டம்

admin See author's posts

ஜெர்மனி சென்றடைந்தார் பிரதமர் மோடி: சிவப்பு கம்பள வரவேற்பு!

admin See author's posts

பிரசாந்த் கிஷோர் அரசியல் கட்சி தொடங்க திட்டம்?.. மக்களிடம் நேரடியாக செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என ட்வீட்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஏ.ஐ.டி.யூ.சி.- விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மே தின ஊர்வலம்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் மே தின கிராம சபை கூட்டம் நடந்தது!

admin See author's posts

விவசாயிகள் கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து 15 நாளில் தீர்வு காண வேண்டும்-மயிலாடுதுறை குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்!

admin See author's posts

எலட்ரிக் ஸ்கூட்டரில் தீ விபத்து: உயிர் தப்பிய தந்தை, மகன்!

admin See author's posts

நாகை அருகே தேர் சக்கரத்தில் சிக்கி பலியான இளைஞருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்

admin See author's posts

மே 1ல் மக்களாட்சி மணம் வீசட்டும் – முதலமைச்சர் வாழ்த்து

admin See author's posts

You cannot copy content of this page