சீர்காழி பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியில் மர்ம நபர்கள் நடமாட்டம் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தட்சிணாமூர்த்தி நகர் பகுதியில் பள்ளி மாணவர்களுக்கான பிற்பட்டோர் நலத்துறையின் சார்பில் மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது. தற்போது கொரோனா நோய் தொற்று காலம் தொடர்வதாலும் பள்ளிகள் இயங்காத காரணத்தினாலும் அனைத்து அரசினர் விடுதிகளும் மூடப்பட்டு கிடக்கின்றன. அவ்வாறு இருக்கின்ற பள்ளி, மாணவ மாணவியர்களுக்கான விடுதிகளும், கல்லூரி மாணவ மாணவிகளுக்கான விடுதிகளும் தொடர்ந்து மூடப்பட்டு இருப்பதனால் அதனை பயன்படுத்தி பல்வேறு சமூக விரோதிகள் விடுதி வளாகத்திற்குள் புகுந்து அங்குள்ள பொருட்களை எடுத்துச் செல்வது, மது அருந்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவது தெரிய வருகிறது. குறிப்பாக சீர்காழி பிற்பட்டோர் நல மாணவர் விடுதியில் இருந்து பல பொருள்கள் தனி நபர்களால் எடுத்து செல்லப்படுவதை அடிக்கடி காண முடிகின்றது. விடுதிக்கு சம்பந்தமில்லாத பலர் பகல் மற்றும் இரவு நேரங்களில் கூடி சில மணிநேரங்கள் கழித்து செல்வது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. பள்ளி கல்லூரி மாணவர் மாணவியர்களின் விடுதி என்பது மிகவும் பாதுகாப்பானதாகவும், அரசினால் கொடுக்கப்பட்ட பாய், போர்வை, ஜமுக்காளம், டேபிள், பெஞ்ச், சேர்,இதர தளவாட பொருள்கள், புத்தகங்கள், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்டவைகள் பத்திரமாக தற்சமயம் இருக்கிறதா என்பதை உடனடியாக ஸ்டாக் இருப்பு கணக்கிட்டு கண்காணிக்க வேண்டும். அந்தந்த விடுதிக் காப்பாளர்கள், கண்காணிப்பாளர்கள் இதற்கான முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும். விரைவில் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதால் விடுதி வளாகத்தில் வெளி நபர்கள் யாராக இருந்தாலும் நடமாட்டத்தை முற்றிலும் தடுத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு சமூக ஆர்வலர் அ. அப்பர்சுந்தரம் கோரிக்கை அனுப்பியுள்ளார்.

More News

சார் பதிவாளர்கள் இனி உயர்ந்த மேடையில் அமரக்கூடாது – வணிகவரித்துறை!

admin See author's posts

அகத்திய முனி வரலாறு மற்றும் வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்!

admin See author's posts

நடிகர் சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு மயிலாடுதுறையில் மதிய உணவு வழங்கப்பட்டது!

admin See author's posts

மயிலாடுதுறையில் ரிங் ரோடு பணி விரைவில் துவங்கும்!

admin See author's posts

மயிலாடுதுறையில் குழந்தைகளை பாதுகாப்பதற்கான நியூமோகோக்கல் கான்ஜீகேட் தடுப்பூசி வழங்கும் விழா!

admin See author's posts

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள் அறிவிப்பு!

admin See author's posts

12ம் வகுப்பில் கூடுதல் மதிப்பெண் பெற விருப்பத் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கியது..!!

admin See author's posts

பயனாளர்களின் தகவல்களை பகிர மாட்டோம்.. இறங்கிவந்த வாட்ஸ்அப் நிறுவனம் !!

admin See author's posts

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்கள்!

admin See author's posts

விவசாயிகளுக்கு உழவு இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி!

admin See author's posts

You cannot copy content of this page