20th September 2021

மாற்றுத் திறனாளிகள் நலனில் தனிக் கவனம் செலுத்த வேண்டும் :தமிழக அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தல்!!

சென்னை : மாற்றுத் திறனாளிகள் நலனில் தனிக் கவனம் செலுத்த வேண்டும் எனத் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பரவலை தடுக்க கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்கக் கோரி மூன்று அமைப்புகளின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை கடந்த முறை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண உதவி வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட 133 கோடி ரூபாய் எப்படிச் செலவிடப்பட்டது என அறிக்கை அளிக்க உத்தரவிட்டது.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.அந்த அறிக்கையில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் குடும்பத்திற்கு ரூ.4000 உதவி தொகை வழங்கப்படும் போதே அந்த குடும்பத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்குத் தனிப்பட்ட முறையில் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த அறிக்கைக்கு ஆட்சேபம் தெரிவித்த மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள், 2020-ம் ஆண்டு வழங்கப்பட்ட நிவாரண உதவியைப் பற்றி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகவும் 2021-ம் ஆண்டு எந்த ஒரு உதவியும் பெறவில்லை என்றும் வாதிட்டனர். மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டப்படி, 25% கூடுதல் உதவியும் வழங்கப்படவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டையும் முன்வைத்தனர்.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான நிவாரண உதவிகள் உரிய முறையில் சென்றடைந்ததாகத் தெரியவில்லை என்றும் அவர்கள் நலனில் தனிக் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அரசுக்கு அறிவுறுத்தினர்.

மேலும் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில் இடைக்கால நடவடிக்கைகள் பற்றி மட்டும் கூறப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், ஏற்றுக்கொள்ளத்தக்க திட்டம் ஒன்றை வகுக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டனர்.அத்துடன் அந்த திட்டம் தொடர்பான அறிக்கை அடுத்த விசாரணையின்போது அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவித்து, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 23-ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

More News

மயிலாடுதுறையில் மருத்துவர், செவிலியர்களுக்கு சேவை செம்மல் விருது

admin See author's posts

நவம்பர் 18-ம் தேதி தியாக திருநாளாக கொண்டாடப்படும்..!!

admin See author's posts

நீலகிரி: கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் மதுபானம்!

admin See author's posts

கடலூர் மாவட்டம் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் அருகே கழுத்தை அறுத்து வாலிபர் படுகொலை!

admin See author's posts

தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வேலைவாய்ப்பு!

admin See author's posts

நடிகை மீரா மிதுன் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு!

admin See author's posts

மயிலாடுதுறை: நெல் கொள்முதல் நிலையம் திறக்க அனுமதி வழங்கப்படாததால் மூங்கில் தோட்டம் கடைவீதியில் விவசாயிகள் திடீர் சாலை மறியல்!

admin See author's posts

மதுபானங்களின் விலை உயர்வு அமலுக்கு வந்தது; மதுப்பிரியர்கள் அதிர்ச்சி!

admin See author's posts

சீா்காழியில் நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை சாா்பில் பாரம்பரிய நெல் திருவிழா!

admin See author's posts

மனைவி மறைவால் கண் கலங்கிய ஓபிஎஸ்: கைகளைப் பிடித்து ஆறுதல் கூறினார் சசிகலா!

admin See author's posts

You cannot copy content of this page