25th January 2022

ஐபிஎல் போட்டிகளை நேரில் காண பார்வையாளர்களுக்கு அனுமதி!

ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் நடைபெற இருக்கும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகளை நேரில் காண ரசிகர்ள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்தியாவில் இந்தாண்டு திட்டமிட்டதுபோல பார்வையாளர்களின்றி ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்பட்டாலும் கொரோனா பாதிப்பு அதிகரித்ததையடுத்து, இடையிலேயே போட்டி தொடர் நிறுத்தப்பட்டது. நீண்ட ஆலோசனைகளுக்கு பின்பு ஐபிஎல் 2021 சீசனின் எஞ்சியுள்ள ஆட்டங்கள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்தது. இதனையடுத்து செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 15 வரை போட்டிகள் நடைபெற உள்ளது.

இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இண்டியன்ஸ் உள்ளிட்ட அணிகள் ஏற்கெனவே அமீரகம் சென்றுவிட்டது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளின் கடைசி ஆட்டங்களை நேரில் காண்பதற்காக ரசிகர்கள் மைதானத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என செய்தி வெளியாகி இருக்கிறது. இது குறித்து பேசியுள்ள அமீரக கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் முபாஷிபர் உஸ்மானி “பிசிசிஐ மற்றும் ஐசிசியிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்” என்றார்.

மேலும் பேசிய அவர் “அமீரத்தில் கிரிக்கெட்டை விரும்பும் பெரும் ரசிகர்கள் இருக்கிறார்கள். எனவே ஐபிஎல் போட்டியின் போது மைதானங்களில் 60 சதவீத ரசிகர்களை அனுமதிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிசிசிஐ, ஐசிசியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்” என்றார் உஸ்மானி.

Advertisement

More News

நடிகர் விஜய் குறித்து தனி நீதிபதி கூறிய எதிர்மறை கருத்துக்கள் நீக்கம்: சென்னை ஐகோர்ட்!!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா, தாளடி அறுவடை பணிகள் தீவிரம்-நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்க விவசாயிகள் கோரிக்கை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு சாரங்கபாணி நினைவுத் தூணிற்கு நினைவஞ்சலி!

admin See author's posts

பிப்.,10 ம் தேதி அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதம்!!

admin See author's posts

மயிலாடுதுறையில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்!!

admin See author's posts

மயிலாடுதுறை சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் அதிமுக அஞ்சலி!!

admin See author's posts

நாகையில் 50 கிராமங்களில் நிலத்தடி நீர் உவர் நீராக மாறியதாக புகார்: ஓ.என்.ஜி.சி.யின் மாசு நீர் சுத்திகரிப்பு நிலையம் முற்றுகை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் வீட்டு மனைப்பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் குடியேற வந்த பெண்!

admin See author's posts

மொழிப்போர் தியாகிகள் நாள் இன்று!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்!!

admin See author's posts

You cannot copy content of this page