மயிலாடுதுறையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் வகையில் 4 வழிச்சாலை அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்-அமைச்சர் எ.வ. வேலு!

மயிலாடுதுறை மாவட்டம் மூங்கில்தோட்டம் பால்பண்ணை பகுதியில் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் கட்டும் பணிக்கான வரைபடங்களையும் பார்வையிட்டார்.

தொடர்ந்து கலெக்டர் லலிதா, கலெக்டர் அலுவலக கட்டுமான பணியின் முன்னேற்றம் குறித்து விளக்கி கூறினார். பின்னர் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டும் பணி 18 மாதங்களில் முடிக்க வேண்டும். மண் பரிசோதனையில் மண் இலகுவாக இருப்பது தெரியவந்ததால் இங்கு 30 முதல் 35 மீட்டர் ஆழம்வரை பைல் பவுண்டேஷன் மேற்கொண்டு கட்டிடம் கட்ட வேண்டும். அதனால் பணி சற்று தாமதமாக ஏற்பட்டுள்ளது.பவுண்டேஷன் பணி முடிந்தவுடன் கட்டிடம் விரைவாக கட்டி முடிக்கப்படும். இந்த கட்டிடத்தில் 35 அரசுத்துறைகள் மற்றும் இணைத் துறை, சார்புத் துறை என 60-க்கும் மேற்பட்ட துறைகள் இடம் பெற உள்ளன.

மயிலாடுதுறை- திருவாரூர் இடையே 36 கி.மீ. தூரத்திற்கு சென்னை- கன்னியாகுமரி தொழில் வழித்தடத் திட்டத்தின் கீழ் 4 வழிச்சாலை அமைக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதற்கான டெண்டர் விரைவில் விடப்பட உள்ளது. ரூ.105 கோடி மற்றும் ரூ.103 கோடி என 2 பணிகளாக பிரித்து 2 ஒப்பந்ததாரர்களிடம் பணியை ஒப்படைக்க உள்ளோம்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் கட்டுவதற்கு போலீஸ் ஆணையரகம் அதற்கான பணிகளை மேற்கொள்ளும். மயிலாடுதுறையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் வகையில் 4 வழிச்சாலை அமைக்க விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது அரசு தலைமை கொறடா கோவி.செழியன், ராமலிங்கம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், ராஜகுமார், பன்னீர்செல்வம், பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளர் (கட்டிடம்) விஸ்வநாத், மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் மற்றும் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement

More News

மயிலாடுதுறையில் வண்ணான் குளத்தை சுற்றி நடைபயிற்சி மேடை, பூங்கா அமைக்கும் பணி!

admin See author's posts

`கூடிய விரைவில் தமிழ்நாட்டை கருணாநிதி நாடு என பெயர் மாற்றுவார்கள்’- ஜெயக்குமார் காட்டம்

admin See author's posts

ஜெர்மனி சென்றடைந்தார் பிரதமர் மோடி: சிவப்பு கம்பள வரவேற்பு!

admin See author's posts

பிரசாந்த் கிஷோர் அரசியல் கட்சி தொடங்க திட்டம்?.. மக்களிடம் நேரடியாக செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என ட்வீட்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஏ.ஐ.டி.யூ.சி.- விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மே தின ஊர்வலம்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் மே தின கிராம சபை கூட்டம் நடந்தது!

admin See author's posts

விவசாயிகள் கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து 15 நாளில் தீர்வு காண வேண்டும்-மயிலாடுதுறை குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்!

admin See author's posts

எலட்ரிக் ஸ்கூட்டரில் தீ விபத்து: உயிர் தப்பிய தந்தை, மகன்!

admin See author's posts

நாகை அருகே தேர் சக்கரத்தில் சிக்கி பலியான இளைஞருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்

admin See author's posts

மே 1ல் மக்களாட்சி மணம் வீசட்டும் – முதலமைச்சர் வாழ்த்து

admin See author's posts

You cannot copy content of this page