19th January 2022

“தடுப்பூசி செலுத்திய பின்பே மாணவர்கள் கல்லூரிக்கு வர வேண்டும்” – அமைச்சர் பொன்முடி தகவல்!

தமிழ்நாட்டில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. அப்போது கல்லூரிகளிலும், விடுதிகளிலும் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இச்சூழலில் இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, “சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் என 112 கல்லூரிகளில் மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.

அவர்கள் அனைவருக்கும் மாநகராட்சி ஆணையர் மூலமாக கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட உள்ளன. முதலமைச்சரின் ஆணைக்கு இணங்க தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் பணி தொடர்ந்து நடைபெறும். செப்டம்பர் 1ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், மாணவர்கள் கல்லூரிகளுக்குத் தடுப்பூசி செலுத்திக் கொண்டு வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்றை ஒழிக்கத் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு உயர் கல்வித்துறை என்றும் உறுதுணையாக இருக்கும். கல்லூரி விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் நேரடியாகக் கல்லூரிக்கு வந்துசெல்ல வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை எல்லாம் அரசும் கல்லூரியும் இணைந்து மேற்கொள்ளும்” என்றார்.

Advertisement

More News

மயிலாடுதுறை:திருவிழந்துர் மகா காளியம்மன் கோவிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு!!

admin See author's posts

குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்தி இடம்பெறுவதை உறுதி செய்க: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் தமிழக ஆளுநருக்கு ராஜகுமார் எம்.எல்.ஏ. மனு!

admin See author's posts

மயிலாடுதுறை :நண்பரின் வீட்டில் தீ வைத்தவர் கைது !!

admin See author's posts

மயிலாடுதுறை: திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரங்கநாதர் திருக்கோயிலில் புத்தாடைகள் மற்றும் சீருடைகள் வழங்கும் விழா – நிவேதா எம்.முருகன்!

admin See author's posts

கோமல் ஊராட்சி 100 நாள் வேலை திட்டத்தில் தூய்மையாகும் பாசன வாய்க்கால்

admin See author's posts

மயிலாடுதுறை: திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை எழுந்தருளும் நிகழ்ச்சி பெருமாள், தாயார், ஆண்டாள் ஏக சிம்மாசனத்தில் அருள்பாலிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை: குத்தாலம் அருகே ஜப்பானிய முறையில் குறுங்காடு வளர்க்கும் என்ஜினீயரிங் பட்டதாரி!

admin See author's posts

மயிலாடுதுறையில் 5 ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்!

admin See author's posts

சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்று பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சொந்த செலவில் சரிசெய்த கொள்ளிடம் போலீசார்!

admin See author's posts

You cannot copy content of this page