22nd January 2022

மயிலாடுதுறை கண்ணாரத்தெரு சாலையில் திடீர் பள்ளம்!

மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் கடந்த 2007ம் ஆண்டுமுதல் பாதாளசாக்கடை திட்டம் செயல்பாட்டில் இருந்து வருகிறது. பாதாளசாக்கடை பராமரிப்பு பணிகளை நகராட்சி நிர்வாகம் தனியாரிடம் ஒப்பந்த அடிப்படையில் வழங்கி பராமரித்து வருகிறது.

தரமற்ற முறையில் பாதாளசாக்கடை திட்டம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், 10 ஆயிரம் இணைப்புகள் உள்ள இத்திட்டத்தில் அளவுக்கதிகமாக இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக பாதாளசாக்கடை குழாய் உடைந்து கழிவுநீரால் மண் அரிப்பு ஏற்பட்டு சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டு வருகிறது.

கச்சேரிரோடு, கண்ணாரத்தெரு, நகராட்சி அலுவலகம் எதிரே, தரங்கம்பாடி சாலை தைக்கால்தெரு, கொத்தத்தெரு, சுமைதாங்கி, திருவாரூர் சாலை என்று 15க்கும் மேற்பட்ட இடங்களில் சாலைகள் திடீரென்று உள்வாங்கி பெரிய பள்ளம் ஏற்பட்டு சரிசெய்யப்பட்டு வருவது தொடர்கதையாக உள்ளது. பாதாளசாக்கடை பிரச்சனையால் 36 வார்டுகளிலும் கழிவுநீர் பல்வேறு சாலைகளில் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் தொற்றுநோய் ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் மயிலாடுதுறை கண்ணாரத்தெருவில் திருவாரூர் செல்லும் பிரதான சாலையில் பாதாளசாக்கடை குழாய் உடைப்பால் சாலை உள்வாங்கி 10 அடி அகலத்திற்கு திடீர் பள்ளம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த நகராட்சி ஆணையர் பாலு, பொறியாளர் சனல்குமார், டிஎஸ்பி வசந்தராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.

காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையில் போலீசார் சாலையில் பள்ளம் ஏற்பட்ட இடத்தை சுற்றிலும் பேரிகார்டு அமைத்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அதே பகுதியில் உள்ள ரேஷன்கடை எதிரே பள்ளம் ஏற்பட்டு மண்ணை கொட்டி சரிசெய்துள்ளனர். மயிலாடுதுறை நகரில் 2 ஆண்டுகளாக சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வரும் பாதாளசாக்கடையை மறுசீரமைப்பு செய்துதர தமிழக அரசு தற்போதைய பிரதான கோரிக்கையாக உள்ளது.

More News

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க. பிரமுகர் தீக்குளிக்க முயற்சி!!

admin See author's posts

சிமெண்டு சாலை அமைக்கும் பணி!!

admin See author's posts

தேசிய போர் நினைவுச் சின்னத்துடன் இணையும் அமர் ஜவான் ஜோதி!: ராணுவ வீரர்கள் மரியாதை

admin See author's posts

ஆஸ்கர் தகுதிப் பட்டியலில் நுழைந்த ‘ஜெய் பீம்’

admin See author's posts

ஒமிக்ரான் பாதிப்பு உள்ள நாடுகளிலிருந்து வருவோருக்கு நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்: ஒன்றிய அரசு அறிவிப்பு!!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் வழங்க ரூ.47.38 லட்சம் நிதி ஒதுக்கீடு – கலெக்டர் லலிதா!

admin See author's posts

மயிலாடுதுறையில் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த தாய்-குழந்தையை காப்பாற்றிய இன்ஸ்பெக்டர்!

admin See author's posts

அதிக அளவில் மரங்களில் கூடு கட்டி தங்கியுள்ள வெளிநாட்டு பறவைகள்!!

admin See author's posts

அரிசி மூட்டைகளை ஏற்றிவந்த லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்!!

admin See author's posts

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் திறப்பு!

admin See author's posts

You cannot copy content of this page