25th January 2022

சிதம்பரம் அருகே திடீரென உள்வாங்கிய சாலை!

சிதம்பரம் அருகே லால்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியிலுள்ள நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை மாலை திடீரென  சாலை உள்வாங்கியது. உள்வாங்கிய இடத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டு அதில் கழிவுநீர் பொங்கி எழுந்தது.  இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் பதற்றத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் ஓடினார்கள். பின்னர் அந்த வழியாக செல்லும் போக்குவரத்தை தடை செய்தனர்.  பின்னர் இது குறித்து சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை மற்றும் நகராட்சி ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அந்தப் பகுதியில் போக்குவரத்து மாற்றப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.

இது குறித்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கூறுகையில் லால்புரம் பகுதியில் இந்த சாலை அதிமுக ஆட்சியில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு தான் ஒரு வழி மார்க்கமாக இருந்த சாலையை இரு வழி மார்க்கமாக மாற்றும் பணியில் போடப்பட்டது. இந்த சாலையின் கீழே சிதம்பரம் நகராட்சியில் சேகரிக்கப்படும் கழிவுநீர் குழாய் இதன் வழியாக செல்கிறது. பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டு இதுபோன்று நிகழ்ந்திருக்கும் என அப்பகுதியில் உள்ளவர்கள் கூறுகின்றனர். அதேநேரத்தில் சாலை தரமில்லாமல் போட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். இது குறித்து சம்பந்தபட்ட நெடுஞ்சாலைதுறையினர் ஆய்வு நடத்தவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே சம்பந்தப்பட்ட நகராட்சி  ஊழியர்கள் இரவோடு இரவாக சாலையை தற்காலிகமாக சரி செய்துள்ளனர். ஆனால் போக்குவரத்திற்கு தடை அளிக்கப்பட்டுள்ளது. அந்தபகுதியில் சாலை உள்வாங்கியதால் சிறிது நேரம் பரபரப்பாக இருந்தது.

 

More News

நடிகர் விஜய் குறித்து தனி நீதிபதி கூறிய எதிர்மறை கருத்துக்கள் நீக்கம்: சென்னை ஐகோர்ட்!!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா, தாளடி அறுவடை பணிகள் தீவிரம்-நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்க விவசாயிகள் கோரிக்கை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு சாரங்கபாணி நினைவுத் தூணிற்கு நினைவஞ்சலி!

admin See author's posts

பிப்.,10 ம் தேதி அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதம்!!

admin See author's posts

மயிலாடுதுறையில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்!!

admin See author's posts

மயிலாடுதுறை சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் அதிமுக அஞ்சலி!!

admin See author's posts

நாகையில் 50 கிராமங்களில் நிலத்தடி நீர் உவர் நீராக மாறியதாக புகார்: ஓ.என்.ஜி.சி.யின் மாசு நீர் சுத்திகரிப்பு நிலையம் முற்றுகை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் வீட்டு மனைப்பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் குடியேற வந்த பெண்!

admin See author's posts

மொழிப்போர் தியாகிகள் நாள் இன்று!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்!!

admin See author's posts

You cannot copy content of this page