சுருக்குமடி வலை விவகாரம்: மீனவர்கள் சார்பில் ஆதார், ரேஷன் அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டம்!

சீா்காழி அருகே சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதிக்கக் கோரி, மீனவா்கள் 3ஆவது நாளாக இன்றும் தங்களது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடா்கின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கொடியம்பாளையம் முதல் தரங்கம்பாடி வரை பல்வேறு மீனவ கிராமங்கள் உள்ளன. தமிழக அரசு மற்றும் உயர் நீதிமன்றம் ஆகியவை கடல் வளத்தை பாதுகாக்கும் வகையில் சுருக்குமடி வரை பயன்படுத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 13 மீனவ கிராமங்கள் சுருக்குமடி வலையை ஆதரித்து சுருக்குமடி வலையை பயன்படுத்தி தொழில் செய்ய வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகின்றனர்.

ஆனால் அரசு உத்தரவுப்படி மீன்வளத் துறையினர் சுருக்குமடி வலையை பயன்படுத்தக்கூடாது என்று கடுமையாக உத்தரவிட்டு கண்காணித்து வருகின்றனர். இதனால் கடந்த சில மாதங்களாக சுருக்கு மடி வலை பயன்படுத்தி மீன் பிடிக்கும் மீனவர்கள் தொழில் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் சுருக்குமடி வலையை ஆதரவு மீனவர்கள் வாழ்வாதாரம் கடந்த இரண்டு ஆண்டுகளாக பாதிக்கப்பட்டதாக கூறி தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்க அனுமதி கோரும் விவகாரத்தில் ஆதரவான நிலைப்பாடு எதுவும் மீனவர்களுக்கு அரசு தரப்பிலிருந்து உத்தரவாதம் அளிக்கப்படவில்லை. இதையடுத்து பல மாதங்களாக காத்திருக்கும் மீனவர்கள் கடந்த 17ஆம் தேதி முதல் மயிலாடுதுறை மாவட்டத்தில் மீனவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்து உண்ணாவிரதம் தொடங்கினர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழியை அடுத்த திருமுல்லைவாசல், மடவாமேடு, பூம்புகார் மற்றும் சந்திரபாடி ஆகிய பகுதிகளில் சுருக்குமடி வலையை ஆதரித்து தொழில் செய்ய அனுமதி கோரியும் 21 வகையான மீன்பிடி ஒழுங்குமுறை சட்டங்களை அமல்படுத்த கோரியும் போராட்டத்தை மீனவர்கள் தொடங்கினர். இதில் திருமுல்லைவாசல் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த மீனவர்கள் திருமுல்லைவாசல் முகத்துவாரம் பகுதியில் சாமியானா அமைத்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மீனவர்கள் 2வது நாள் திடீரென திருமுல்லைவாசல் கடலில் இறங்கி போராடத் தொடங்கினர். ஆண்கள் பெண்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலில் இறங்கி போராடிய போது மூன்று பெண்கள் மயங்கி கடலில் விழுந்தனர். கடல் அலையில் சிக்கிய மீனவப் பெண்களை சக மீனவர்கள் காப்பாற்றி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவத்தால் கடற்கரையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கடலில் இறங்கி போராடிய மீனவர்களிடம் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் மீன்வளத்துறை அதிகாரிகள் தான் பேச வேண்டுமென கோரி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் மீண்டும் உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்து போராட்டத்தை தொடர்ந்தனர். இதேபோல் பூம்புகார் பகுதியிலும் இன்று மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு பூம்புகாரில் திருமுல்லைவாசல், மடவாமேடு, சந்திரபாடி மற்றும் பூம்புகார் பகுதியில் மீனவர் பிரதிநிதிகள் ஒன்றுகூடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது மீனவ பிரதிநிதிகளிடம் சீர்காழி சப் கலெக்டர் நாராயணன், தாசில்தார் சண்முகம், டிஎஸ்பி லாமெக், மீன்வளத்துறை இணை இயக்குனர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. இதனால் இன்று மூன்றாவது நாள் போராட்டதை தொடர்கின்றனர்.

இன்றைய போராட்டத்தின் போது அந்தந்த பகுதிகளில் உண்ணாவிரதம் மேற்கொள்ளும் மீனவர்கள் அங்கிருந்து நடைபயணமாக புறப்பட்டு சீர்காழி சப் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து அங்கு தங்களது ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். மீனவர்களின் இந்த போராட்ட அறிவிப்பால் மீனவ கிராமங்களில் பதட்டம் நிலவுகிறது.

நேற்று இரவு முதல் கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டு நிலைமையை கண்காணித்து வருகின்றனர் மீனவர் போராட்டத்தில் பல கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

More News

சார் பதிவாளர்கள் இனி உயர்ந்த மேடையில் அமரக்கூடாது – வணிகவரித்துறை!

admin See author's posts

அகத்திய முனி வரலாறு மற்றும் வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்!

admin See author's posts

நடிகர் சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு மயிலாடுதுறையில் மதிய உணவு வழங்கப்பட்டது!

admin See author's posts

மயிலாடுதுறையில் ரிங் ரோடு பணி விரைவில் துவங்கும்!

admin See author's posts

மயிலாடுதுறையில் குழந்தைகளை பாதுகாப்பதற்கான நியூமோகோக்கல் கான்ஜீகேட் தடுப்பூசி வழங்கும் விழா!

admin See author's posts

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள் அறிவிப்பு!

admin See author's posts

12ம் வகுப்பில் கூடுதல் மதிப்பெண் பெற விருப்பத் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கியது..!!

admin See author's posts

பயனாளர்களின் தகவல்களை பகிர மாட்டோம்.. இறங்கிவந்த வாட்ஸ்அப் நிறுவனம் !!

admin See author's posts

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்கள்!

admin See author's posts

விவசாயிகளுக்கு உழவு இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி!

admin See author's posts

You cannot copy content of this page