25th January 2022

மானாமதுரை பிரத்யங்கிரா தேவி கோயிலில் திருமணத் தடைகள் நீங்க சுயம்வரா பார்வதி ஹோமம்!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வேதியரேந்தல் விலக்குப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மஹா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோயிலில் நடைபெற்று வரும் அதிருத்ர மகா சகஸ்ர சண்டீ யாகத்தில் திருமணத் தடைகள் நீங்க ஸ்ரீ சுயம்வரா பார்வதி ஹோமம் நடத்தப்பட்டது.

அன்னதானத்திற்கு பெயர்போன மானாமதுரை பிரத்தியங்கிரா தேவி கோயிலில் 19 ஆவது ஆண்டாக அதிருத்ர மகா சகஸ்ர சண்டீ யாகம் கடந்த 7ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

கோயில் யாகசாலையில் உள்ள ஏராளமான யாக குண்டங்களில் தஞ்சை குருஜி கணபதி சுப்பிரமணியம் சாஸ்திரிகள் தலைமையில் ஏராளமான வேத விற்பன்னர்கள் கூடி இந்த யாகத்தை நடத்துகின்றனர். யாகத்தின் முக்கிய ஹோமமாக திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணத் தடைகள் நீங்கி திருமணம் நடைபெற வேண்டி ஸ்ரீ சுயம்வரா பார்வதி ஹோமம் நடத்தப்பட்டது.

யாகத்தின் போது யாகசாலையில் உள்ள பிரத்யங்கிரா தேவி உருவப்படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

முன்னதாக அனைவருக்கும் 26 வகையான செல்வங்கள் கிடைக்க வேண்டி ஸ்ரீ சாம்ராஜ்ய லெட்சுமி ஹோமம் நடத்தப்பட்டது. யாகத்திற்கான ஏற்பாடுகளை பிரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் நிர்வாகி ஞானசேகரன் சுவாமிகள் செய்துள்ளார். வரும் 16 ஆம் தேதி வரை பிரத்யங்கிரா தேவி கோயிலில் அதிருத்ர சகஸ்ர சண்டீ யாகம் நடைபெறுகிறது.

More News

நடிகர் விஜய் குறித்து தனி நீதிபதி கூறிய எதிர்மறை கருத்துக்கள் நீக்கம்: சென்னை ஐகோர்ட்!!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா, தாளடி அறுவடை பணிகள் தீவிரம்-நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்க விவசாயிகள் கோரிக்கை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு சாரங்கபாணி நினைவுத் தூணிற்கு நினைவஞ்சலி!

admin See author's posts

பிப்.,10 ம் தேதி அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதம்!!

admin See author's posts

மயிலாடுதுறையில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்!!

admin See author's posts

மயிலாடுதுறை சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் அதிமுக அஞ்சலி!!

admin See author's posts

நாகையில் 50 கிராமங்களில் நிலத்தடி நீர் உவர் நீராக மாறியதாக புகார்: ஓ.என்.ஜி.சி.யின் மாசு நீர் சுத்திகரிப்பு நிலையம் முற்றுகை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் வீட்டு மனைப்பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் குடியேற வந்த பெண்!

admin See author's posts

மொழிப்போர் தியாகிகள் நாள் இன்று!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்!!

admin See author's posts

You cannot copy content of this page