26th October 2021

t 23 புலியை கொல்ல வேண்டாம் #savet23 – சென்னை உயர்நீதிமன்றம்!

தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் 12 வயது மதிக்கத்தக்க T23 என பெயரிடப்பட்ட ஆண் புலி ஒன்று, கடந்த சில வாரங்களாக கால்நடைகளை வேட்டையாடி வந்தது. தற்போது வரை 4 பேரை புலி கொண்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த புலியை பிடிக்க வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

புலியின் தொடர் வேட்டையை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து புலி வேட்டையாடப்பட்டு பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனையடுத்து கும்கி யானைகள், சிறப்பு பயிற்சி பெற்ற நாய்கள் மற்றும் 150 வனதுறையினர் களத்தில் இறங்கப்பட்டனர்.

தொடக்கத்தில் சுட்டு கொல்லப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், #savet23 எனும் ஹாஷ் டேக் சமூக வலைதளத்தில் வைரலானது.

இதனையடுத்து புலி சுட்டுக்கொல்லப்படாது என வனத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சங்கீதா தோக்ரா என்பவர், புலியை சுட்டுக் கொல்லக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவின் மீதான விசாரணை இன்று தொடங்கியது.

இதில், புலியை சுட்டுக்கொல்லக்கூடாது என்றும் அந்த புலி ஆட்கொல்லியாக இல்லாமல் கூட இருக்கலாம் என்றும் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தெரிவித்தார். அதே போல புலியை பிடிக்கும் பணியில் மற்ற உயிரினங்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்றும் தெரிவித்து வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளனர்.

முன்னதாக கடந்த 10 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட முயற்சி தற்போது 11வது நாளாக இன்றும் தொடர்கிறது.

Advertisement:

More News

மயிலாடுதுறையில் மோடி கையெழுத்துடன் முன்களப் பணியாளர்களுக்கு வாழ்த்து அட்டை வழங்கல்!

admin See author's posts

கொள்ளிடம் அருகே பண்ணையில் தீ விபத்து; 500 கோழிகள் கருகி சாவு!

admin See author's posts

செம்பனார்கோவில்: கேட்டரிங் சர்வீஸ் அலுவலகத்தில் பிணமாக கிடந்த ஊழியர்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுநூலக கட்டிடம், பள்ளி கட்டிடம், பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்!

admin See author's posts

சித்தர்காடு அருகே, கிணற்றில் விழுந்த காளையை மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு பாராட்டு!

admin See author's posts

திருவாரூர்: கனமழையால் இடிந்து விழுந்த தியாகராஜர் கோயில் கமலாலயம் குளத்தின் சுற்றுச் சுவர்!

admin See author's posts

சீர்காழி அருகே ஏரி மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் ஆகாய தாமரையால் மூடிய அவலம்!

admin See author's posts

மயிலாடுதுறை சின்னமேடு மீனவ கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்க கல் சுவர் எழுப்புவதற்கு பூமி பூஜை போடப்பட்டது!

admin See author's posts

தமிழக அரசின் பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை காவிரியில் எழுந்தருளிய பரிமள ரெங்கநாதர்!

admin See author's posts

You cannot copy content of this page