தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள், டெல்லியில் இன்று (26/02/2021) மாலை 04.30 மணிக்கு செய்தியாளர்களைச் சந்திக்கின்றனர். அப்போது, தமிழகம், கேரளா, மேற்குவங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை அறிவிக்க உள்ளனர். மேலும், தேர்தல் தேதி தொடர்பான முழு தேர்தல் அட்டவணையைத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வெளியிடுகிறார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வரும். ஏற்கனவே தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்குத் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக, முதற்கட்டமாக துணை ராணுவப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்ட தலைமைத் தேர்தல் ஆணையர் தலைமையிலான தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள், அரசியல் கட்சியினர் மற்றும் மாவட்ட, மாநில தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் அட்டவணையை இறுதி செய்ய, காணொளி மூலம் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தின் குழு ஆலோசனை நடத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சென்னையை சேர்ந்த வெள்ளி பதக்கம் வென்ற உலக ஆணழகன் செந்தில்குமரன் மாரடைப்பால் காலமானார்

admin See author's posts

மயிலாடுதுறை ஜேசிஐ டெல்டா சார்பில் கபாசுரக் குடிநீர்

admin See author's posts

அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று உறுதி!

admin See author's posts

கொரோனா கட்டளை மையம் அமைக்கப்பட்டு அதற்கான அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு

admin See author's posts

கொரோனாவால் பலியான மதுரை கர்ப்பிணி மருத்துவர் சண்முகப் பிரியா-. முன்களப் பணியாளர்கள் கடும் அதிர்ச்சி

admin See author's posts

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது மோட்டார் வாகனச் சட்டப்படி நடவடிக்கை: அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி

admin See author's posts

தமிழகத்தில் வரும் 10ந் தேதி முதல் 24ந் தேதி வரை முழு ஊரடங்கு

admin See author's posts

தமிழகத்தில் புதிய உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 197 பேர் உயிரிழப்பு

admin See author's posts

கடும் கட்டுப்பாடுகளுடன் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கை அறிவித்தது கர்நாடக அரசு

admin See author's posts

புதிய தலைமை செயலாளராக இறையன்பு ஐ.ஏ.எஸ். நியமனம்

admin See author's posts

You cannot copy content of this page