தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று தாக்கலானது: முழு விபரம் 👇

விவசாயத்திற்கு முக்கியத்துவம் தரும் வகையில் அத்துறைக்கென தனியாக பட்ஜெட் சமர்ப்பிக்கப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. தேர்தலில் வென்ற திமுக ஆட்சி பொறுப்பேற்ற உடன் கடந்த ஆண்டு மாநிலத்தின் முதல் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இந்நிலையில் இந்தாண்டுக்கான வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் இப்பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்தியாவில் ஆந்திரா, கர்நாடகாவிற்கு பிறகு வேளாண்மைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யும் 3ஆவது மாநிலம் தமிழகம் ஆகும். கடந்த ஆண்டின் 86 வகையான அறிவிப்புகளில் 80 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டு செயல்படுத்தப்படுகிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.

 • சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்க திட்டங்களை அரசு செயல்படுத்தும்
 • பயிர்க்காப்பீடு திட்டத்திற்கு பட்ஜெட்டில் மாநில அரசின் பங்காக ரூ.2,339 கோடி ஒதுக்கீடு
 • 9.26 லட்சம் விவசாயிகளுக்கு பயிர்காப்பீடாக ரூ.2,055 கோடி வழங்கப்பட்டுள்ளது.
 • 7,500 ஏக்கரில் இயற்கை வேளாண் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்படும்.
 • மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம் ரூ.71 கோடியில் புதிதாக செயல்படுத்தப்படும்
 • நெல் ஜெயராமன் பெயரில் 200 ஏக்கரில் பாரம்பரிய நெல் விதைகளை உற்பத்தி செய்து 20 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கப்படும்
 • வேளாண்மை பட்டப்படிப்பு முடித்த 200 இளைஞர்களுக்கு தொழில் தொடங்க தலா ரூ.1லட்சம் வழங்கப்படும்
 • மரம் வளர்ப்புத் திட்டத்திற்காக வேளாண் பட்ஜெட்டில் ரூ.12 கோடி ஒதுக்கீடு
 • கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தரும்புரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் துவரை உற்பத்தி மண்டலங்கள் அமைக்கப்படும்
 • மாவட்ட, மாநில அளவில் சிறுதானிய திருவிழா நடத்தப்படும்.
 • இயற்கை விவசாய முறைகளை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு
 • சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் 2 மண்டலங்கள் உருவாக்கப்படும்
 • தஞ்சை, சேலம், திருவள்ளூர், நெல்லை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் சோயா பீன்ஸ் சாகுபடியை அதிகரிக்க நடவடிக்கை
 • மயிலாடுதுறையில் ரூ.75 லட்சத்தில் மண் பரிசோதனைக்கூடம் அமைக்கப்படும்
 • ஆதி திராவிட விவசாயிகளுக்கு கூடுதலாக 20% மானியம் வழங்கப்படும்
 • கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக டன்னுக்கு 195 ரூபாய் உயர்த்திதரப்படும் என அறிவிப்பு
 • கரும்பு சாகுபடி ஊக்குவிப்புக்காக ரூ.10 கோடி ஒதுக்கீடு
 • தனியார் பங்களிப்புடன் தேனி, கோவை, கன்னியாகுமரியில் மொத்த காய்கறி விற்பனை வளாகங்கள் அமைக்கப்படும்
 • தக்காளி சாகுபடியை ஊக்குவிக்க ரூ. 4 கோடி ஒதுக்கீடு
 • விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க டான்ஜட்கோவிற்கு ரூ.5,157.56 கோடி ஒதுக்கீடு
 • ஊரக வளர்ச்சித் துறை மூலம் ரூ.1245.65 கோடியில் பண்ணைக்குட்டைகள், தடுப்பணைகள் மற்றும் தூர்வாரும் பணிகள்
 • விவசாயிகள் இடுபொருட்களை எடுத்துச்செல்லவும், விளைபொருட்களை சந்தைக்கு எடுத்த செல்லவும் கிராம பஞ்சாயத்துகளில் ரூ.604.73 கோடி செலவில் 2,750 கிமீ நீளத்தில் சாலைகள்
 • வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் உற்பத்தியாளர் குழுக்கள், உற்பத்தியாளர்கள் குழுக்கள் மற்றும் சமுதாய பண்ணை பள்ளிகளை உருவாக்க ரூ.30.56 கோடி ஒதுக்கீடு,
 • சிறு, குறு, நடுத்தர தொழில்கள் (MSME) மூலம் சிறிய விவசாயம் சார்ந்த தொழில்களை தொடங்க ரூ.1.5 கோடி வரை மூலதன மானியம்.
 • வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் கிராம வங்கிகள் மூலம் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு ரூ.1,83,425 கோடி வேளாண் கடன் வழங்கப்படுவதைக் கண்காணித்தல்.
 • வேளாண்மை துறைக்கு மொத்தமாக ரூ.33,007.68 கோடி நிதி ஒதுக்கீடு
 • ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்திற்கு 300 கோடி ஒதுக்கீடு
 • கருப்பட்டி உள்ளிட்ட பனை சார்ந்த மதிப்புக்கூட்டு பொருட்கள் உற்பத்திக்கு 75 % மானிய உதவி வழங்கப்படும்
 • தமிழகத்தில் ரூ.8கோடி செலவில் டிஜிட்டல் விவசாயம் அறிமுகப்படுத்தப்படும்

Advertisement

More News

மயிலாடுதுறையில் வண்ணான் குளத்தை சுற்றி நடைபயிற்சி மேடை, பூங்கா அமைக்கும் பணி!

admin See author's posts

`கூடிய விரைவில் தமிழ்நாட்டை கருணாநிதி நாடு என பெயர் மாற்றுவார்கள்’- ஜெயக்குமார் காட்டம்

admin See author's posts

ஜெர்மனி சென்றடைந்தார் பிரதமர் மோடி: சிவப்பு கம்பள வரவேற்பு!

admin See author's posts

பிரசாந்த் கிஷோர் அரசியல் கட்சி தொடங்க திட்டம்?.. மக்களிடம் நேரடியாக செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என ட்வீட்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஏ.ஐ.டி.யூ.சி.- விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மே தின ஊர்வலம்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் மே தின கிராம சபை கூட்டம் நடந்தது!

admin See author's posts

விவசாயிகள் கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து 15 நாளில் தீர்வு காண வேண்டும்-மயிலாடுதுறை குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்!

admin See author's posts

எலட்ரிக் ஸ்கூட்டரில் தீ விபத்து: உயிர் தப்பிய தந்தை, மகன்!

admin See author's posts

நாகை அருகே தேர் சக்கரத்தில் சிக்கி பலியான இளைஞருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்

admin See author's posts

மே 1ல் மக்களாட்சி மணம் வீசட்டும் – முதலமைச்சர் வாழ்த்து

admin See author's posts

You cannot copy content of this page