1st August 2021

ஸ்டெர்லைட் ஆலையில் தமிழக அரசே ஆக்சிஜன் தயாரிக்கலாம்: உச்ச நீதிமன்றம்!

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னையில் உள்ள பல்வேறு கொரோனா மருத்துவமனையில் நூற்றுக்கணக்கானா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில், மருத்துவ துறையில் ஆக்ஸிஜன் தேவை அதிகரிப்பதால், ஆக்ஸிஜனை உற்பத்தி செய்வதற்காக தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று வேதாந்தா லிமிடெட் நிறுவனம உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம், நாடு தற்போது கொரோனா தொற்றை எதிர்த்து போராடி வரும் நிலையில், சட்டம் ஒழுங்கை மேற்கோள் காட்டி பிரச்சினைகளை உருவாக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் பதில் அளித்துள்ளது.

இந்தியாவில், தற்போது கொரோனா தொற்று நிலை ஒரு தேசிய அவசரநிலையாக மாறியுள்ளதாக குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆல்லையை திறப்பது தொடர்பாக வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க 1,000 டன் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்துஇலவசமாகக் கொடுக்க இருப்பதாக கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ். ஏ போப்டே தலைமையிலான பெஞ்ச், தமிழகம் இதை தயாரிக்க முடியும் என்று பரிந்துரைத்து, திங்கள்கிழமைக்குள் முன்மொழியப்பட்ட திட்டத்தை சமர்ப்பிக்குமாறு மாநில அரசிடம் கேட்டுக் கொண்டது.

மேலும் ‘ஆக்ஸிஜனை உற்பத்தி செய்வதில் உங்கள் பொறுப்பை ஏன் நிறைவேற்றவில்லை? உங்களுக்கு வேதாந்த நிறுவனத்துடன் சிக்கல் இருப்பதால், நீங்கள் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்ய மாட்டீர்களா? இது என்ன வகையான வாதம். ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்படுவதை உறுதி செய்வதில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம். இது வேதாந்தத்தின் கேள்வி அல்ல. மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் (மாநிலம்) ஆக்ஸிஜனை உற்பத்தி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

நீதிமன்றத்தின் இந்த அறிவுறுத்தலுக்கு பதில் அளித்துள்ள தமிழகம் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதனுக்கு கூறுகையில்,, ஆக்ஸிஜன் ஆலையை மீண்டும் திறப்பது சட்டம் ஒழுங்கு மற்றும் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். ஏனெனில் பொதுமக்கள் இதை எதிர்க்கின்றனர். ‘அங்கு முழு நம்பிக்கையின்மை உள்ளது,’ என்று அவர் கூறினார். மேலும் இது தொடர்பாக போராட்டத்தில், 13 பேர் தங்கள் உயிர்களை தியாகசம் செய்துள்ளனர்.

ஆனால் ‘நேற்று, சட்டம் ஒழுங்கு நிலைமை பற்றி நீங்கள் எங்களிடம் சொல்லவில்லை. நிலைமை வித்தியாசமாக இருந்திருக்கும். இதை சத்தியப்பிரமாணத்தில் தாக்கல் செய்தீர்களா? என்று உச்ச நீதிமன்றம் கேட்டதை தொடர்ந்து, பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வதாக வைத்தியநாதன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த போராட்டத்தில், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் அமைப்புக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் கொலின் கோன்சால்வ்ஸ், மாநில அரசு இந்த பிரிவை கையகப்படுத்தி ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யலாம் என்று கூறினார்.

‘தமிழக அரசு இந்த ஆலையை கையகப்படுத்தி ஆக்ஸிஜனை உற்பத்தி செய்தால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ‘மக்களுக்கு தேவைப்படும்போது அவர்கள் ஏன் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யவில்லை? நாட்டில் உள்ள மக்களுக்கு இது (ஆக்ஸிஜன்) தேவைப்படுகிறது, ‘என்று பெஞ்ச் கூறிய நிலையில், தமிழகத்தில் உபரி ஆக்ஸிஜன் இருக்கலாம், ஆனால் பிரச்சினை முழு நாட்டுடன் தொடர்புடைய என்றும், ‘நாட்டின் தேசிய சொத்துக்கள் குடிமக்களிடையே சமமாக விநியோகிக்கப்பட வேண்டும்’ என்று பெஞ்ச் கூறியுள்ளது.

Source: The Indian Express தமிழ்

More News

மயிலாடுதுறை மாவட்டம் காசநோய் கண்டறியும் முகாமை தொடங்கி வைத்தார் நிவேதா எம்.முருகன்!

admin See author's posts

அரசு வேலைவாய்ப்பில் தமிழ் வழிக் கல்வி பயின்றோருக்கு இடஒதுக்கீடு வழங்க ஏதுவாக விவரம் கோரியது டி.என்.பி.எஸ்.சி..!!

Rathika S See author's posts

தமிழக பள்ளிகளில் பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

admin See author's posts

ஆன்லைனில் TRB தேர்வுகள் நடைபெறும் – ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு..!

Rathika S See author's posts

இன்று மயிலாடுதுறை மாவட்ட காவலர்களுக்கு அணிவகுப்பு நடைபெற்றது!

admin See author's posts

+2 துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியாகிறது..!

admin See author's posts

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு. மாதம் ரூ.19,900 சம்பளத்தில். இந்திய அஞ்சல் துறையில் அருமையான வேலை.!!!

Rathika S See author's posts

மாவட்ட சுகாதார துறையில் மீண்டும் நேரடி வேலைவாய்ப்பு.!

Rathika S See author's posts

சென்னையில் மக்கள் அதிகம் கூடும் 9 மார்க்கெட் பகுதிகளில் உள்ள கடைகள் திறக்க தடை!

admin See author's posts

தமிழக காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் கட்டாய லீவு… மிகைநேர ஊதியம் – டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு!

admin See author's posts

You cannot copy content of this page