ஐந்து நபர்களுக்கு மேல் கூடினால் கடுமையான நடவடிக்கை:தமிழகக் காவல்துறை

நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகக் காவல்துறைத் தலைமை இயக்குநர் அலுவலகம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வெளியாகி உள்ள அந்த அறிக்கையில், நமது மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கொடிய கொரோனா தொற்று நோய் மேலும் பரவாமல் தடுக்க மத்திய அரசும், தமிழக அரசும் தொடர்ந்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பொதுமக்களின் பாதுகாப்பு கருதி தமிழகம் முழுவதும் 144 குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டு, அரசு நிர்வாகம் பல நிபந்தனைகளைக் கடைப்பிடிக்கப் பொதுமக்களுக்குத் தொடர்ந்து அறிவுரைகளை வழங்கி வந்துள்ளது.

144 தடை உத்தரவு பிரகடனப்படுத்தப்பட்ட பிறகும், பொதுமக்களில் பலர் அதன் சட்ட விதிமுறைகளைச் சரிவரக் கடைப்பிடிக்காமலும், சமூக இடைவெளியைத் தவிர்த்தும், உத்தரவுகளை மீறிச் செயல்பட்டு வருகின்றனர். இத்தடை உத்தரவுப்படி ஐந்து நபர்களுக்கு மேல் எந்த இடத்திலும் எக்காரணத்திற்காகவும் கூடுவது சட்ட விரோதமானது. இச்சட்டம் அனைத்து சமூக, சமய மற்றும் மதம் சார்ந்த விழாக்கள், வழிபாடுகள் மற்றும் கூட்டங்களுக்கும் முழுமையாகப் பொருந்தும். ஆகவே பொதுமக்கள் 144 தடை உத்தரவு நடைமுறைகளை எக்காரணம் கொண்டும் மீறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்று தமிழகக் காவல்துறை மீண்டும் வலியுறுத்துகிறது.

இனி 144 தடை உத்தரவு மீறி, ஐந்து நபர்களுக்கு மேல், எந்த இடத்திலும் எவ்வித காரணங்களுக்காகவும் பொதுமக்கள் கூடினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது மிகக் கடுமையான சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கப்படுகிறார்கள். ஆகவே பொதுமக்கள் சட்டவிதிகளை மீறுவதைத் தவிர்த்து, இக்கொடிய தொற்று நோயை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்குத் தமிழக காவல்துறையினருடன் முழுமையாக ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என அறிவுறுத்தியுள்ளார்.

SOURCE: PT

More News

தமிழக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொரோனா உறுதி

admin See author's posts

திமுக அமைச்சரவை பட்டியல் வெளியாகி உள்ளது.

admin See author's posts

புதுச்சேரி முதல்வராக பதவியேற்க உள்ளரங்கசாமிக்கு திடீர் உடல்நலக்குறைவு

admin See author's posts

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி: மருத்துவமனையில் அனுமதி

admin See author's posts

கொரோனாவால் நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்!

admin See author's posts

உடனடியாக கட்டளை மையம் திறக்க வேண்டும் – முக ஸ்டாலின்!

admin See author's posts

லக்னோவில் ஆக்ஸிஜன் ஆலையில் சிலிண்டர் வெடிப்பு.., 2 பேர் உயிரிழப்பு .!

admin See author's posts

தமிழ்நாட்டில் மேலும் புதிய கட்டுப்பாடுகள்..மே.6 முதல் அமல்!

admin See author's posts

மறைந்த ட்ராபிக் ராமசாமி அவர்களுக்கு மயிலாடுதுறையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

admin See author's posts

மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு!

admin See author's posts

Leave a Reply

You cannot copy content of this page