21st September 2021

கொரோனா பரவலால் தஞ்சை பெரிய கோயில் மூடல்!

தஞ்சாவூர்: கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயில், தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில்கள் மூடப்பட்டன.கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, தமிழகத்தில் அதிகம் பேர் கூடுவதை தவிர்க்கும் வகையில், மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் வரலாற்று நினைவுச் சின்னங்கள் சுற்றுலா தளங்கள் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி, மக்கள் அதிகம் கூடும் இடங்களை மூடி, தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. உலகப் புகழ் பெற்ற, தஞ்சை பெரிய கோயிலுக்கு வெளிநாட்டினர் உட்பட, தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், மத்திய தொல்லியல் துறையின் கீழ் உள்ள சுற்றுலா தலங்களை, மே 15ம் தேதி வரை மூட உத்தரவு பிறப்பித்து, மத்திய அரசு கடிதம் அனுப்பியது.இந்நிலையில், பெரிய கோயில் நுழைவு வாயிலில் அறிவிப்பு விளம்பரம் வைக்கப்பட்டு, கோயில் மூடப்பட்டது. கோயிலுக்கு வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். அதேநேரம், கோயில் ஆகமவிதிப்படி, தினமும் நான்கு கால பூஜைகள் வழக்கம் போல் நடைபெறும் என அறநிலையத் துறை மற்றும் தொல்லியல் துறையினர் அறிவித்தனர். இதேபோல், கும்பகோணம் அருகே தாராசுரத்தில், இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும், ஐராவதீஸ்வரர் கோயிலும் மூடப்பட்டது.

Source: தினமலர்

More News

சிதம்பரம் அருகே உள்ள வாய்க்காலில் லாரி கவிழ்ந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை நெடுஞ்சாலை துறை கோட்டம் புதிதாக உருவாக்கப்பட்ட அலுவலகம் திறப்பு!

admin See author's posts

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக வன்கொடுமை தடுப்பு சட்டம் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்!

admin See author's posts

மயிலாடுதுறை: பலத்த மழையால் டி.எஸ்.பி.அலுவலகத்தை நீர் சூழ்ந்தது!

admin See author's posts

தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சந்நிதானத்தை சந்தித்து தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆசி பெற்றார்!

admin See author's posts

மயிலாடுதுறையில் மாபெரும் தூய்மைப்பணி முகாம்; மாவட்ட ஆட்சியர் ஆய்வு !

admin See author's posts

வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு, பொறையார், கிடராங்கொண்டான் பகுதிகளில் மின்நிறுத்தம்!

admin See author's posts

தஞ்சாவூரில் 100 ஆண்டுகள் பழமையான மூன்று கட்டிடங்களைக் கையகப்படுத்திய மாநகராட்சி!

admin See author's posts

மயிலாடுதுறை: வடகிழக்கு பருவமழை பேரிடர் காலத்தில் ஆபத்துகளை சமாளிக்க தீயணைப்பு வீரர்கள் நேற்று ஆழ்வார் குளத்தில் பொதுமக்களுக்கு தத்துவ செயல்விளக்கம்!

admin See author's posts

விரைவில் TNPSC தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகிறது!

admin See author's posts

You cannot copy content of this page