26th October 2021

மயிலாடுதுறை அருகே அரசு பள்ளியில் ஆசிரியர், பெற்றோர் மாேதலால் பரபரப்பு!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கிளியனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருபவர் மகேந்திரன். இவரை நேற்று பள்ளியில் சில மாணவர்கள் கிண்டல் செய்துள்ளனர். இதுதொடர்பாக 12-ஆம் வகுப்பு மாணவர்கள் நான்கு பேரை ஆசிரியர் மகேந்திரன் அடித்ததாக கூறப்படுகிறது. கிண்டல் செய்த மாணவர்களை விட்டுவிட்டு தங்களை ஆசிரியர் அடித்ததாக மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, மாணவர்களின் பெற்றோர் கிளியனூர் ஊராட்சிமன்ற தலைவரும், பள்ளியின் கல்விகுழுத் தலைவருமான முஹம்மது ஹாலீதுவை அழைத்துச் சென்று பள்ளி தலைமையாசிரியர் கலிவரதனிடம் புகார் தெரிவித்துள்ளனர். அப்போது அங்கு வந்த தமிழாசிரியர் மகேந்திரன் மாணவர்களின் பெற்றோர், ஊராட்சிமன்ற தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஊராட்சிமன்ற தலைவரை அடிக்க முற்பட்டதால், கைகலப்பு ஏற்பட்டது. இதில் தமிழாசிரியர் மகேந்திரன் தலைமையாசிரியர் அறையில் இருந்த டேபிளை தள்ளிவிட்டு பொருட்களை சேதப்படுத்தியுள்ளார்.

இச்சம்பவம் அறிந்த பொதுமக்கள் பள்ளியின் முன்பு திரண்டனர். இச்சம்பவம் அறிந்த பெரம்பூர் போலீசார், கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பவம் தொடர்பாக இருதரப்பினரும் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். விசாரணை அறிக்கை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் கலைந்து சென்றனர்.

Advertisement

More News

கொள்ளிடம் அருகே பண்ணையில் தீ விபத்து; 500 கோழிகள் கருகி சாவு!

admin See author's posts

செம்பனார்கோவில்: கேட்டரிங் சர்வீஸ் அலுவலகத்தில் பிணமாக கிடந்த ஊழியர்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுநூலக கட்டிடம், பள்ளி கட்டிடம், பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்!

admin See author's posts

சித்தர்காடு அருகே, கிணற்றில் விழுந்த காளையை மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு பாராட்டு!

admin See author's posts

திருவாரூர்: கனமழையால் இடிந்து விழுந்த தியாகராஜர் கோயில் கமலாலயம் குளத்தின் சுற்றுச் சுவர்!

admin See author's posts

சீர்காழி அருகே ஏரி மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் ஆகாய தாமரையால் மூடிய அவலம்!

admin See author's posts

மயிலாடுதுறை சின்னமேடு மீனவ கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்க கல் சுவர் எழுப்புவதற்கு பூமி பூஜை போடப்பட்டது!

admin See author's posts

தமிழக அரசின் பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை காவிரியில் எழுந்தருளிய பரிமள ரெங்கநாதர்!

admin See author's posts

மயிலாடுதுறை: பள்ளிகள் திறப்பை முன்னிட்டு வாகனங்கள் ஆய்வு-மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா!

admin See author's posts

You cannot copy content of this page