3rd December 2021

ஞானாம்பிகை கல்லூரியில் ரூ.70 லட்சத்தில் 6 புதிய வகுப்பறை கட்டடங்கள்; காணொளி மூலம் முதல்வர் தொடங்கி வைத்தார்

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட 6 வகுப்பறைகள் மற்றும் கட்டடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொளி மூலம் திறந்து வைத்தார். இதையடுத்து, கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் த. அறவாழி தலைமை வகித்தார். மாயூரம் நகர கூட்டுறவு வங்கித் தலைவர் விஜிகே.செந்தில்நாதன், மயிலாடுதுறை நுகர்வோர் கூட்டுறவு வங்கித் தலைவர் எஸ்.அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேசிய உடல்கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர் கா.மங்கையர்க்கரசி வரவேற்றார்.

இதில், மயிலாடுதுறை சட்டப் பேரவை உறுப்பினர் வீ.ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, குத்துவிளக்கு ஏற்றி வகுப்பறைக் கட்டடங்களை மாணவிகளின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். இதில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You cannot copy content of this page