3rd December 2021

தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையில் உலக மரபு சின்னங்கள் வாரவிழா -ஒரு வாரத்திற்கு கட்டணமின்றி சுற்றுலாப் பயணிகள் பார்வையிடலாம்

மயிலாடுதுறை மாவட்டம்,தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையில் பாரம்பரிய உலக மரபு சின்னங்கள் பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு தொல்லியல் துறை சார்பில் நவம்பர் 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை கட்டணமின்றி சுற்றுலா பயணிகள் மற்றும் மாணவர்கள் பார்வையிடலாம்.

கி.பி. 1600 முதல் 1634 வரை தரங்கம்பாடியை ஆட்சி செய்த டேனிஷ்காரர்கள்(டென்மார்க் நாட்டினர்) 1620 ல் கடற்கரைக்கு மேற்கே டேனிஷ் கலை நுனுக்கத்துடன் கோட்டையை கட்டி தங்களது அதிகார மையமாக பயன்படுத்தினர். 400 ஆண்டுகள் பழமையாகியும் இன்றும் கம்பீரமாய் காட்சியளிக்கும் இக்கோட்டையில் செயல்படும் அகழ்வைப்பகத்தில் 14 ,15,16 ஆம் நூற்றாண்டுகளில் டேனிஷ்காரர்கள்,தமிழர்கள் பயன்டுத்திய பொருட்கள்,1200 ஆம் ஆண்டுகால சிலைகள், பீங்கான்,மண்,மரத்தாலான பல நூறு ஆண்டுகள் பழமையான பொருட்கள்,டேனிஷ் அரசர்கள்,ஆளுநர்களின் புகைப்படங்கள்,டேனிஷ்கால பத்திரங்கள்,போர்கருவிகள் ,16 ஆம் நூற்றாண்டில் தரங்கம்பாடி வந்த கப்பல் ஒன்றின் உடைந்த பாகங்கள், என ஏராளமான வரலாற்று சின்னங்களை பத்திரப்படுத்தி காட்சிக்கு வைத்துள்ளனர்.

மேலும் கோட்டையின் தரைத்தளத்தில் சிறைச்சாலை,ஓய்வறைகள், பண்டகவைப்பறை,பீர்,ஒயின் கிடங்கு அறைகளாக டேனிஷ்காலத்தில் பயன்படுத்தப்பட்ட அறைகளை பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. உலக மரபு சின்னங்கள் வார விழாவை முன்னிட்டு சனிக்கிழமை மாணவர்களுக்கு ஓவியப்போட்டி, கட்டுரைப் போட்டிகள் தெரசா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். தலைமையாசிரியர் அருட்சகோதரி செவிலி, தாளாளர் ஆரோக்கிய மேரி, தொல்லியல் துறை அலுவலர் வசந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வரலாற்று சின்னங்கள் நிறைந்த இக்கோட்டையை நவம்பர் 19ஆம் தேதி முதல் ஒரு வாரக்காலத்திற்கு எந்தவித கட்டணமுமின்றி பொதுமக்கள்,மாணவர்கள்,இளைஞர்கள் பார்வையிடலாம் என்று டேனிஷ் கோட்டை நிர்வாகம் அறிவித்துள்ளது.

பார்வையிட வரும் சுற்றுலா பயணிகளுக்கு டேனிஷ் கோட்டை நிர்வாகம் கரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கிருமி நாசினி, தர்மாமீட்டர் பரிசோதனை செய்த பின்பு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.

More News

மயிலாடுதுறை அருகே 10 ஆண்டுகளாக தூர்வாரப்படாத வடிவாய்க்காலால் விவசாயிகளின் 500 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியது!

admin See author's posts

மயிலாடுதுறை:பேருந்தின் படியில் தொங்கி மாணவர்கள் பயணம் .. கோபத்தில் நடுச்சாலையில் பேருந்தை நிறுத்திய ஓட்டுநர்!

admin See author's posts

விவசாயிகளின் காப்பீடு தொகையை மோசடி செய்த வி.ஏ.ஓ. பணியிடை நீக்கம்!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார் – நிவேதா எம்.முருகன்!

admin See author's posts

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்பு !

admin See author's posts

டில்லியில் பெட்ரோல் விலை ரூ.8 குறைப்பு!

admin See author's posts

கலைஞரை போல ஸ்டாலினும் இதனை செய்ய வேண்டும்.. முதல்வர் ஸ்டாலினுக்கு ராமதாஸ் முக்கிய கோரிக்கை!

admin See author's posts

மயிலாடுதுறை: விவசாயிகளின் காப்பீடு தொகை மோசடி செய்ததாக வி.ஏ.ஓ. மீது புகார்!

admin See author's posts

அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம்

admin See author's posts

வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.101 உயர்வு

admin See author's posts

You cannot copy content of this page