8th December 2021

வைத்தீஸ்வரன் கோவில் கீழ வீதியில் ஆம்புலன்ஸ் சேவையை துவங்கி வைத்த தருமையாதீனம் 27 வது குருமகா சன்னிதானம்!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவில் பகுதிகளில் 2000 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் இயங்கி வரும் 108 அவசர ஊர்தி சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெறும் அவசர தேவைகளுக்கு சென்று விடுவதால் பேரூராட்சிகளில் நடைபெறும் அவசர தேவைகளுக்கு தாமதமாக செல்லும் சூழல் நிலவி வந்தது.

இதனையடுத்து பேரூராட்சி சார்பில் அவசர ஊர்தி ஏற்பாடு செய்ய பேரூராட்சி தலைவர் குகன் கோரிக்கை விடுத்தார். இதனால் அப்குதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள் மற்றும் மேலையூர் சீனிவாச பள்ளி 86ம் ஆண்டு முன்னாள் மாணவர்கள் இணைந்து புதிய அவசர ஊர்தியை பொதுமக்களுக்கு அவசர தேவைக்காக வாங்கி கொடுத்தனர். இதனை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் விழா என நடைபெற்றது.

இவ்விழாவில் கலந்து கொண்டு நல்லாசி வழங்கிய தருமபுரம் ஆதீனம் 27வது சன்னிதானம் அவசர ஊர்தி சேவையை துவங்கி வைத்தார். பேரூராட்சி தேவைக்காக சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்த முன்னாள் செயல் அலுவலர் முயற்சியே ஒரே மாதத்தில் செயல்பாட்டுக்கு வந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிகழ்ச்சியில் வைத்தீஸ்வரன் கோவில் அரிமா சங்க தலைவர் அகோரம், செயலாளர் ராஜசேகர், பொருளாளர் சீனிவாசன், வைத்தீஸ்வரன் கோவில் செயல் அலுவலர் பிரகாஷ், தலைஞாயிறு செயல் அலுவலர் குகன், அரிமா சங்க மண்டல தலைவர் மதியரசன், செந்தில் பைரவன், ஒருங்கிணைப்பாளர் சுதாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement

More News

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள 12 அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன!

admin See author's posts

ஸ்பீட் என்ஜினுக்கு தடை விதிக்காவிட்டால் போராட்டம்-நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மீனவர்கள் அறிவிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறையை சேர்ந்த மாணவி அருண் பிரியா சென்னையில் நடைபெற்ற மாநில கராத்தே போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றார்!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் தற்கொலை முயற்சி!

admin See author's posts

மயிலாடுதுறை: நெல் ஜெயராமன் நினைவு தினத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு பாரம்பரிய விதை நெல் வழங்கப்பட்டது!

admin See author's posts

மயிலாடுதுறை: ஆக்கூரில் சிறப்புலி நாயனார் கோவில் குருபூஜை சிறப்பு வழிபாடு!

admin See author's posts

திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்!

admin See author's posts

மயிலாடுதுறை: ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பெட்ரோல் ஸ்கூட்டர் வாகனத்தை ஆட்சியர் இரா.லலிதா வழங்கினார்!

admin See author's posts

மயிலாடுதுறை: பட்டவர்த்தியில் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவிக்க எதிர்ப்பு தெரிவித்து கலவரம் !

admin See author's posts

மயிலாடுதுறை அருகே நிச்சயித்த பெண் கிடைக்காததால் இளைஞர் தற்கொலை முயற்சி!

admin See author's posts

You may have missed

You cannot copy content of this page